Kallakurichi: கள்ளக்குறிச்சி பலி 40 ஆக உயர்வு.. மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம்!
Kallakurichi : மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை அமலாக்கத்துறை எஸ்.பி.செந்தில்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் உயிரிழிந்த நிலையில் ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண்ணெரிச்சல், வயிற்று வலி, தலைவலி, உள்ளிட்டஉடல் உபாதைகள் ஏற்பட்டன. நேற்று காலையில் இருந்து ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
நேரம் செல்ல செல்ல தொடர்ச்சியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபி பணியிட மாற்றம்
இந்நிலையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை அமலாக்கத்துறை எஸ்.பி.செந்தில்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழகம் முழுவதும் திடீர் சோதனை நடத்தவும் சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள் பற்றிய பட்டியல் தயாரித்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை அதிகாரி நியமனம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்