Former DGP Rajesh Das: 'போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Former Dgp Rajesh Das: 'போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!

Former DGP Rajesh Das: 'போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!

Kathiravan V HT Tamil
May 24, 2024 06:32 PM IST

Former DGP Rajesh Das: பீலா வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.

'போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!
'போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு நெஞ்சுவலி!’ நீதிமன்றத்தில் பரபரப்பு!

ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள தையூரில் பீலா வெங்கடேசன் இல்லை உள்ளது. இந்த இல்லத்தில் கடந்த 18ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், 10 நபர்களுடன் வந்து அத்துமீறி நுழைந்து சில பொருட்களை எடுத்து சென்றதாக கடந்த 20ஆம் தேதி கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராஜேஷ் தாஸ் இன்று காலை 9 மணி அளவில் கைது செய்யப்பட்டார். 

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு 

4 மணி நேரத்திற்கும் மேல் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை தாராததால் அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் சட்டப்பிரிவு 353 கீழ் ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர். 

திருப்போரூர் நீதிமன்றத்தில் நெஞ்சுவலி

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்  முன் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, திருப்போரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

நீதிமன்றத்தின் உள்ளே செல்லும் போது சிரித்த முகத்துடன் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் வேர்த்த முகத்துடன் கைத்தாங்களாக போலீசார் அழைத்து வந்தனர், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அழைத்து வந்த வாகனத்திலேயே தண்ணீர் கொடுத்து அமர வைத்து உள்ளனர்.  

பீலா வெங்கடேசன் புகார்

தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கி விட்டு 10 பேருடன் சேர்ந்து அத்துமீறி நுழைந்து மிரட்டி விட்டு சென்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் தனது முன்னாள் கணவரும் முன்னாள் டிஜிபியுமான ராஜேஷ் தாஸ் மீது புகார் அளித்தார். விவாகரத்து விசாரணை விவகாரம் தொடர்பாக பீலா வெங்கடேசன் வீட்டிற்கு சென்று ராஜேஷ் தாஸ் பிரச்சனை செய்ததாக தகவல் வெளியானது.

ராஜேஷ்தாஸ் கைது

இந்த நிலையில் பீலா வெங்கடேஷன் புகாரின் பேரில் விசாரணையை தொடக்கிய கேளம்பாக்கம் காவல்துறையினர் இன்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார்

தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சரின் பணிக்கான சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பு விசாரணைக்கு பிறகு, கடந்த ஜூன் 16ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதமும், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸின் இந்த நடவடிக்கைக்கு துணையாக இருந்த புகாரில் செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்த கண்ணனுக்கு 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பியான கண்ணன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கினை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை கடந்த ஜூன் 9ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், "குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த 3 ஆண்டு சிறை, 20 ஆயிரம் அபராதத்தை நீதிபதி உறுதி செய்தார். அதே போல் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கும் 500 ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்தது.

விவாகரத்து முடிவை எடுத்த பீலா ராஜேஷ்

இதற்கிடையில் ராஜேஷ்தாஸின் மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான பீலாராஜேஷ் விவாகரத்து செய்யும் முடிவு எடுத்தார். மேலும் பீலா ராஜேஷ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.