தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman Vs Varunkumar Ips: சாதிகள் இல்லையடி பாப்பா! நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு வருண் குமார் ஐபிஎஸ் பதிலடி!

Seeman Vs Varunkumar IPS: சாதிகள் இல்லையடி பாப்பா! நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு வருண் குமார் ஐபிஎஸ் பதிலடி!

Kathiravan V HT Tamil

Jul 13, 2024, 07:33 PM IST

google News
Seeman Vs Varunkumar IPS: ”சாதிய வன்மத்துடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் செயல்பட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி இருந்த நிலையில், பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார்”
Seeman Vs Varunkumar IPS: ”சாதிய வன்மத்துடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் செயல்பட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி இருந்த நிலையில், பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார்”

Seeman Vs Varunkumar IPS: ”சாதிய வன்மத்துடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் செயல்பட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி இருந்த நிலையில், பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார்”

திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் சாதிரீதியாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ள நிலையில், பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டில் பதிலடி கொடுத்து உள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.

சீமான் குற்றச்சாட்டு 

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள வருண் ஐபிஎஸை குற்றம்சாட்டி இருந்தார். அதில் “ஒரு அதிகாரியை எஸ்.பியாக வைத்துள்ளீர்கள் வருண்ணு, அவரு எங்கள் ஊரை சேர்ந்தவர். தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் என யாரையுமே அவருக்கு பிடிக்கவில்லை. எங்கள் மீது பிறப்பு வெறுப்பு அவருக்கு உள்ளது. ஏற்கெனவே துரைமுருகனை சென்னைக்கு வர சொல்லி குண்டாஸில் போட்டது வருண் ஐபிஎஸ்தான். இப்போதும் சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வருவதும் வருண் ஐபிஎஸ்தான். இதையெல்லாம் மறந்துவிடுவோமா?. சர்வேசனும், நீங்களும் ஐபிஎஸ் படிக்கும்போது ஒரே பேட்ஜ் மெட்டாக இருந்தீர்கள். ரத்தீஷ் அவருடைய தம்பியாக உள்ளார். மேலிட அழுத்தம் என்று கூறுகிறீர்கள். எத்தனை நாட்களுக்கு நீங்கள் மேலிடத்தில் இருப்பீர்கள். தேவர், நாடார்,கோனார் என தொடர்ந்து வன்மத்துடன் உள்ளர். என்னை ஏன் கைது செய்யவில்லை. ” என சீமான் கூறி இருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் குற்றச்சாட்டு குறித்து யார் பெயரையும் குறிப்பிடாமல், ’பாரதியாரின் சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற கவிதையை சுட்டிக்காட்டி வருண் குமார் ஐபிஎஸ் பதில் அளித்து உள்ளார்.

சாட்டை துரைமுருகன் பேசியது என்ன?

விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் பேசுகையில்,  “திமுகவிடம் திமிர்தனம் உள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘நாய்லாம் பி.ஏ பட்டம் வாங்குகின்றது’ என சொல்கிறார். மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி கூட பி.ஏ.தான் படித்து உள்ளார். யாரை பார்த்து நாய் என சொல்கிறீர்கள். ஜோதிராவ் பூலே போட்ட வழியில் டிக்டாக், டப் ஸ்மேஷ் செய்தவர்கள்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரெல்லாம். ஊரான் பிள்ளைக்கு ஏன் இனிஷியல் போடுகின்றீர்கள் என கூறி இருந்தார். 

ஐயாயிரம் பேர் இல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆள்கின்றனர்

தொடர்ந்து பேசிய சாட்டை துரைமுருகன், “ஐயாயிரம் பேர் கூட இல்லாத குடும்பத்தை சேர்ந்த கருணாநிதியை ஐந்து முறை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை, திருக்குறள் கூட தெரியாத ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை, விளையாட்டுத் தனமாக திரியக்கூடிய ஒருவரை விளையாட்டு துறை அமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை. காசு இல்லை எனில் திமுகவினரை கோபாலபுரம் நாய் கூட மதிக்காது, ஆனால் காசு கொடுக்காமல் 38 லட்சம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி வாங்கி உள்ளது.” என சாட்டை துரைமுருகன் பேசி இருந்தார்.

அடுத்த செய்தி