DMK VS NTK: அரைவேக்காடு மாதிரி பேசாதீங்க! மனநிலையை பரிசோதிங்க! நாம் தமிழர் கட்சியின் சீமானை விளாசிய கீதாஜீவன்!
DMK VS NTK: மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை சோதித்துக் கொள்வது நல்லது. பெண் காவலர்களை தவறாக பேசியதால்தான் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதை சீமான் ஆதரிக்கிறாரா? என கீதாஜீவன் கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது, மனநிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறி உள்ளார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர் சந்திப்பு
இந்த நிலையில் இது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் எங்கள் தலைவர் கலைஞரை பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதை திமுக வன்மையாக கண்டிக்கின்றது. தலைவரை பற்றி தமிழ் மக்கள் அனைவரும் அறிவர். பிச்சைக்காரர் மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டில் இப்படி வளர்ச்சி வந்துள்ளதற்கு கலைஞர்தான் காரணம்.