தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை’ வேலுமணி கேள்விக்கு கே.என்.நேரு பதில்

’அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இல்லை’ வேலுமணி கேள்விக்கு கே.என்.நேரு பதில்

Kathiravan V HT Tamil

Mar 30, 2023, 12:35 PM IST

Amma Unavagam: எந்த உணவகத்தில் உணவு தரமில்லை என்று குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ - ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்
Amma Unavagam: எந்த உணவகத்தில் உணவு தரமில்லை என்று குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ - ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்

Amma Unavagam: எந்த உணவகத்தில் உணவு தரமில்லை என்று குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ - ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் பேரவையில் நாள்தோறும் நடந்து வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அம்மா உணவகம் முறையாக நடத்தப்படுவதில்லை என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் ஒரு இடத்தில் கூட அம்மா உணவகம் மூடப்படவில்லை என்றும் தெரிவித்தார். அம்மா உணவகம் விவகாரம் தினமும் அரசியலாக்கப்படுவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’அம்மா உணவகத்தில் தினந்தோறும் உணவு தரமாக இல்லை என்ற குற்றாட்டு தினந்தோறும் வருகிறது’ என குற்றம்சாட்டி இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அம்மா உணவகத்தை பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும்தான் திட்டமிட்டு செய்திகளை பரப்புவதாகவும் எந்த உணவகத்தில் உணவு தரமில்லை என்று குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் முதலமைச்சர் பதிலளித்தார்.

டாபிக்ஸ்