தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து..தங்கம் விலை உயர்வு, கன மழை வாய்ப்பு - டாப் 10 தமிழ்நாடு செய்திகள் இன்று

Top 10 News: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து..தங்கம் விலை உயர்வு, கன மழை வாய்ப்பு - டாப் 10 தமிழ்நாடு செய்திகள் இன்று

Oct 31, 2024, 02:48 PM IST

google News
மதுரையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து, தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்வு என டாப் 10 தமிழ்நாடு செய்திகள் இன்று பிற்பகல் வரை பார்க்கலாம்
மதுரையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து, தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்வு என டாப் 10 தமிழ்நாடு செய்திகள் இன்று பிற்பகல் வரை பார்க்கலாம்

மதுரையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து, தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்வு என டாப் 10 தமிழ்நாடு செய்திகள் இன்று பிற்பகல் வரை பார்க்கலாம்

தீபாவளி கொண்டாட்டம் தமிழ்நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் , சென்னை பழவந்தாங்கல், மடிப்பாக்கம் பகுதியில் மிதமான மழை பெய்தது. மேலும் வானிலை நிலவரம் உள்பட தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் வரை டாப் 10 செய்திகளை பார்க்கலாம்

உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்

சிவகாசி பட்டாசு ரூ. 6 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடம் வந்து ராக்கெட் லாஞ்சரை பாதுகாப்பாக அங்கிருந்து கொண்டு சென்றனர்.

மதுரையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து போடி வரை இயக்கப்படும் விரைவு ரயில், மதுரை சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில் மின்சார எஞ்ஜின் கழற்றப்பட்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது. பின்னர் ரயில் போடியை நோக்கி புறப்பட்டபோது, எஞ்சினுக்கு அடுத்து இருந்த ரயில் மேலாளர் பகுதியுடன் இணைந்த இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானபெட்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டது.இதனால் இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக போடி ரயில் 118 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் சேலம், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது

சாக்லேட் அலங்காரத்துடன் லஷ்மி குபேரர் சாமிக்கு பூஜை

தீபாவளி பண்டிகையை ஒட்டி வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள லஷ்மி குபேரர் கோயிலில் உள்ள சாமி சிலைக்கு சாக்லேட் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்

ஆவின் பொருள்கள் ரூ. 115 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை உயர்வு

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை நாளான இன்று மேலும் சவரனுக்கு ரூ. 120, கிராமுக்கு ரூ. 15 அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,455 எனவும், சவரனுக்கு ரூ. 59, 640 எனவும் விற்கப்படுகிறது.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய்க்கு பாராட்டுகள்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ரசிகர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்" என்றார்.

தளபதி விஜய்யின் தவெக மாநாடு குறித்து கேட்கப்பட்டபோது, " விஜய் மாநாடு நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறினார்.

தீபாவளி நாளில் 82 பேர் பட்டாசு வெடித்து காயம்

மதியம் 12 மணி வரை தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு தீ விபத்து நிகழ்ந்திருப்பதாகவும், இதில் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அரசு முத்திரையுடன் போலி நீட் சான்றிதழ் - மாணவர் கைது

நீட் தேர்வில் 129 மதிப்பெண் எடுத்துவிட்டு 698 மதிப்பெண் எடுத்ததுபோல், அரசு முத்திரையுடன் போலி சான்றிதழைத் தயாரித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி செய்த மாணவரை கைது செய்த போலீசார், போலி சான்றிதழ் தயாரிக்க உடந்தையாக இருந்த நபர்களையும் தேடி வருகின்றனர்

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி