தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : கொஞ்சம் கஷ்டம் தான்.. தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்க போகுது!

Weather Update : கொஞ்சம் கஷ்டம் தான்.. தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்க போகுது!

Divya Sekar HT Tamil

Mar 29, 2024, 07:03 AM IST

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

Heavy Rain : உஷார் மக்களே.. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது!

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

இந்நிலையில் இன்று முதல் 31.03.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

01.04.2024 மற்றும் 02.04.2024: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று  முதல் 31.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 20 முதல் 22ம் தேதி வரை சில பகுதிகளில் கோடை மழை பெய்தது. அதன் பின்னர் மீண்டும் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் இன்று வரை அதிக கடும் வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:

தண்ணீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.

தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.

லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.

தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.

வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.

தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.

சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.

தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

டாபிக்ஸ்

அடுத்த செய்தி