Rakul Preet Singh: ‘கல்யாணத்திற்கு பிறகு அந்த மாதிரியான ஆடைகள்’.. கிடுக்குப்பிடி கேள்வி.. அசால்ட்டாக பதில் கொடுத்த ரகுல்
ஆனால் அது யாருடைய வாழ்க்கையாக இருந்தாலும் இயல்பாக நடக்கும் செயல்முறை ஆகும். ஆகையால் நான் அப்படி ஒரு ஆண் மகனை வழி நடத்தமாட்டேன். காலம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு எதை ஒத்து வருகிறதோ அதை செய்கிறார்கள் - ரகுல்
ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் தனியார் நிறுவன ஃபேஷன் நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக என்டிடிவிக்கு அவர் நேர்காணல் கொடுத்தார். அப்போது அவரிடம் கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆண் மகனை ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஆடை அணியச் சொல்வீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் , "இல்லை, எனது குடும்பம் மற்றும் ஜாக்கியின் குடும்பம் இரண்டிலும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன். இந்திய சமூகத்தில் திருமணம் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அது யாருடைய வாழ்க்கையாக இருந்தாலும் இயல்பாக நடக்கும் செயல்முறை ஆகும். ஆகையால் நான் அப்படி ஒரு ஆண் மகனை வழி நடத்தமாட்டேன். காலம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு எதை ஒத்து வருகிறதோ அதை செய்கிறார்கள்” என்று பேசினார்
தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.
இதனையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அவர்கள், கடந்த பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் டி.என்.ஏ தளத்திற்கு ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த பேட்டியில், ஜாக்கி தன்னுடைய அப்பாவை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ உண்மையில் அன்று நான் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய தந்தையை ஜாக்கி உடனான அந்த சந்திப்பிற்கு தயார்படுத்தி, அவர் முதன்முறையாக உங்களை சந்திக்க வருகிறார். இந்த சந்திப்பை அசெளரியமாக மாற்றி விடாதீர்கள். ஜாக்கி ராணுவத்தைச் சேர்ந்தவர் அல்ல.ஆகையால் நீங்கள் பையனை பார்த்தால் மட்டும் போதும் என்று கூறியிருந்தேன். ( ரகுல் ப்ரீத் சிங் தந்தை ராணுவத்தைச் சேர்ந்தவர்)
ஜாக்கியிடமும் நீ எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். அப்பா எதையும் உன்னிடம் கேட்கமாட்டார் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அப்பாக்கள் அப்பாக்களாத்தானே நடந்து கொள்வார்கள். ஜாக்கியிடம் அவர் நேரடியாக சில விஷயங்களை கேட்டார். ஆனால் ஜாக்கி அதற்கு தயாராக இருந்தார். என்னுடைய அம்மாவின் பிறந்தநாளிற்கு அவர் டெல்லி வந்திருந்தார்.
நாங்கள் மதிய உணவை ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய அப்பா ஜாக்கியிடம்அடுத்ததாக உங்களது திட்டம் என்ன என்று கேட்டார்.
அதற்கு ஜாக்கி… தன்னுடைய அடுத்தப்பட வெளியீடு குறித்தான வேலைகள் குறித்து பேசினார். அதற்கு என்னுடைய அப்பா, வேலை உள்ளிட்டவையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ரகுலை பொறுத்தவரை உன்னுடைய திட்டம் என்ன என்று கேட்டார்.
இதைப்பார்த்த எனக்கு, சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவு என்னுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது. ஆனால் அதற்கு ஜாக்கி கொடுத்த பதிலானது என்னுடைய அப்பாவை அவரின் ரசிகராக மாற்றிவிட்டது. ஆம் ஜாக்கி… ரகுல் எப்போது ரெடியாக இருக்கிறாளோ… அப்போது நானும் ரெடியாக இருப்பேன் என்று சொன்னார்’ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்