தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘கிறிஸ்தவனாக பெருமைப் படுகிறேன்.. இது சங்கிகளை கோபப்படுத்தும்’ துணை முதல்வர் உதயநிதி பேச்சு!

‘கிறிஸ்தவனாக பெருமைப் படுகிறேன்.. இது சங்கிகளை கோபப்படுத்தும்’ துணை முதல்வர் உதயநிதி பேச்சு!

Dec 19, 2024, 09:13 AM IST

google News
‘அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள். வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர்’
‘அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள். வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர்’

‘அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள். வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர்’

நான் படித்த பள்ளி, கல்லூரி அனைத்துமே கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும், நான் ஒரு கிறிஸ்தவன் என கூறுவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், இது பல சங்கிகளை கோபப்படுத்தும் என்றும் பேசினார்.

கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

நான் ஒரு கிறிஸ்தவன் தான்

‘‘உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். நான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படித்தது லயோலா கல்லூரி. நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன். இது பல சங்கிகளை கோபப்படுத்தும். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள். வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர். 

சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி உள்ளார். இப்படி ஒரு நீதிபதி இருந்தால், நீதிமன்றத்தில் நியாயம் எப்படி கிடைக்கும்? மதரீதியான அவதூறு பேச்சு பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதிமுக அதனை ஆதரிக்கவில்லை. இதன் மூலம் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகிறது. 

அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி தொடர்கிறது

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒரு தீர்மானம் கூட மத்திய பாஜக அரசை கண்டித்து இயற்றப்படவில்லை என்பதே இதற்கு சாட்சி. திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம். கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நான் முதல்வர் திட்டம் தொடங்கி வைப்பு

இதைத் தொடர்ந்து கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேர்க்கல்வித்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘‘முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி 31 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 29 மையம் துவக்கி உள்ளோம்.இன்று 30 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம்.கோவை மாணவர்களை சந்திக்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கும்.நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் உறுதியோடு படிக்கும் மாணவர்கள் கோவை மாணவர்கள்.

தமிழ்நாடு ஒட்டுமொத்த பிரச்சனையை தீர்க்கும் மாடல், திராவிட மாடல் ஃபார்முலா. நான் முதல்வன் திட்டத்தை உலகமே புகழ்ந்து கொண்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 30 லட்சம் ஒளி ஏற்றி வைத்துள்ளது.2லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.25 மாணவர்கள் லண்டன் சென்று வந்தனர். இது தான் திராவிட மாடல் வெற்றி. இதில் 15 பேர் தன்னை சந்தித்தனர்.தங்கை அமிர்தா சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.பல நூறு அமிர்தவை உருவாக்க இந்த நான் முதல்வன் திட்டம் செயல்படுகிறது.

வேலை வாய்ப்பை உருவாக்க இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு என்றும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும்,’’ என தெரிவித்தார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி