தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Liqer Death: கள்ளசாராய மரணம் - ஆளுநரை சந்தித்து புகாரளிக்க அதிமுக முடிவு

Liqer Death: கள்ளசாராய மரணம் - ஆளுநரை சந்தித்து புகாரளிக்க அதிமுக முடிவு

Kathiravan V HT Tamil

May 17, 2023, 07:33 PM IST

கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ஓ.எஸ்.மணியன் பேட்டி
கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ஓ.எஸ்.மணியன் பேட்டி

கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்துவது, வரும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவது குறித்தும்; கழகப் பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகாரளிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கட்சியினர் எடப்பாடியார் அவர்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அண்ணன் ஓபிஎஸை பொறுத்தவரை தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர், நிர்வாகிகளால் ஒதுக்கப்பட்டவர், கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளால் புறக்கணிக்கப்பட்டவர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஒட்டுமொத்த பொதுக்குழுவும் செயற்குழுவும் அண்ணன் எடப்பாடியார் அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதோ, அன்றைக்கே 100 சதவீத அதிகாரம் பெற்றதாக எடப்பாடியார் ஆகிவிட்டார். அவரை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

அரசியல் விமர்சனம் செய்யக்கூடியவர்கள் அதிமுக இரண்டாகவும், மூன்றாகவும் பிளந்து கிடக்கிறது என்று சொல்லி பலகீனபடுத்துவதற்காக பேசும் பேச்சே தவிர; அதிமுக ஒன்றுதான், அது எடப்பாடியார் கையில்தான் உள்ளது.

திமுக அரசு பொறூப்பேற்ற நாள் முதல் திமுகவில் உள்ள ஒவ்வொருவரும் எப்படி சம்பாதிப்பது, எதை செய்தால் அதிகப்பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நோக்காக கொண்டுள்ளனர்.

அதிகாரிகளை மிரட்டி சமூகத்தில் என்னென்ன தவறுகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அதனை குறிக்கோளாக செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என கூறினார்.

டாபிக்ஸ்