தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Weather Update : தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Today Weather Update : தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Divya Sekar HT Tamil

Jan 08, 2023, 10:48 AM IST

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல வரும் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காலைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த மூன்று மணி நேரத்தை பொறுத்த அளவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை என 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குளிரை பொறுத்த அளவில் அடுத்த 8 நாட்களுக்கு சென்னையில் குளிர் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது ஜனவரி 15-16 தேதி வரையில் குளிர் தொடரும் எனவும் இமயமலையிலிருந்து இந்திய பெருங்கடலை நோக்கி நகர்ந்து வரும் குளிர்ந்த காற்றுதான் இதற்கு காரணம் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 8.6 டிகிரி செல்சியசும், உதக மண்டலத்தில் 7.1 டிகிரி செல்சிசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல அதிகபட்சமாக காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் சுமார் 25.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதேபோல வட மாநிலங்களில் குளிர் 2-5 டிகிரி என இருந்தாலும் தமிழ்நாட்டில் 29-30 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சமாக வெப்பநிலை இருக்கும். குறைந்தபட்சமாக 23-24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். 

இன்று(ஜன.08) மன்னர் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு, கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்