தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Weather Update : உஷார் மக்களே.. இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Today Weather Update : உஷார் மக்களே.. இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Divya Sekar HT Tamil

Jan 21, 2023, 07:32 AM IST

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 21-ம் தேதி அதாவது இன்று ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனி நிலவ வாய்ப்புள்ளது.

22, 23, 24 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்கள்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியடெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமானமழை பெய்யக் கூடும்.

சென்னை,புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இந்நிலையில் இன்று (ஜன 21) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்