தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திமுகவின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது - அண்ணாமலை

திமுகவின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது - அண்ணாமலை

Divya Sekar HT Tamil

Aug 17, 2022, 11:34 AM IST

கருத்து சுதந்திரத்திலும் திமுக இரட்டை நிலைப்பாட்டையும், மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கருத்து சுதந்திரத்திலும் திமுக இரட்டை நிலைப்பாட்டையும், மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரத்திலும் திமுக இரட்டை நிலைப்பாட்டையும், மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை : திமுக அரசின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்க போவதாக, ஆகஸ்ட் 11ஆம் தேதி உறுதிமொழி எடுத்தார்.

தமிழக அரசுக்கு சொந்தமான, 'டாஸ்மாக்' நிறுவனம், சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட்14ஆம் தேதி, ஒரே நாளில், 274 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. திமுகவின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது”எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கனல் கண்ணன் கைதிற்கும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை, சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பின்பும், கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது, தி.மு.க., அரசு.

மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு, உடனே கைது செய்துள்ள அரசின் நடவடிக்கை வாயிலாக, கருத்து சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும், மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டனர்” என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்