தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாட்டுக்கு தட்டி கொடுக்குற மாதிரி எனக்கும் தட்டுங்க! அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

மாட்டுக்கு தட்டி கொடுக்குற மாதிரி எனக்கும் தட்டுங்க! அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

Kathiravan V HT Tamil

Mar 28, 2023, 01:27 PM IST

MRK Panneer Selvam: 22 மாத திமுக ஆட்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சத்து 92ஆயிரம் ஹெக்டர் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது
MRK Panneer Selvam: 22 மாத திமுக ஆட்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சத்து 92ஆயிரம் ஹெக்டர் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது

MRK Panneer Selvam: 22 மாத திமுக ஆட்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சத்து 92ஆயிரம் ஹெக்டர் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது

வேளாண் நிதிநிலை அறிக்கை விவாதங்கள் மீதான பதிலுரை சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அதில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் போது மக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்தை கேட்டு செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். 27 மாவட்டங்களில் 525 விவசாயிகளின் கருத்துகளை உள்வாங்கி முதல்வரின் ஆலோசனை பெற்று வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரித்தோம்.

ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

கட்சிக்கு அப்பார்பட்டு படித்தவர்கள், திரையுலகினர், வெளிநாட்டவர்களின் பாராட்டுக்களை வேளாண் பட்ஜெட் பெற்றுள்ளது.

22 மாத திமுக ஆட்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு லட்சத்து 92ஆயிரம் ஹெக்டர் சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது என்றார்.

‘இதுக்கு கூட கைத்தட்ட மாட்டீங்களா? மாடு ஓட்றோம் தட்டி அப்போது குத்தினால் மாட்டுக்கு வலிக்கும் தட்டினால் உற்சாகமாக செல்லும்’ என்றார்.

வேளாண் துறை அமைச்சரின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், உணவு தானிய உற்பத்தியில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட 11 லட்சத்து 73 மெட்ரிக் டன் அதிகம்.

குறுவை நெல் சாகுபடியில் 2022-23ஆம் ஆண்டில் 5 லட்சத்து 33ஆயிரம் ஏக்கர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 47 ஆண்டுகாலம் நிகழாத சாதனையாக விளங்குகிறது.

கரும்பு சாகுபடியை பொறுத்தவரை கடந்த கலைஞர் ஆட்சியில் இரண்டே கால் லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது.அது படிப்படியாக குறைந்து கரும்பு ஆலைகள் மூடும் சூழலை நோக்கி சென்றது.

புதியதாக பொறுப்பேற்ற ஆட்சியில் கடந்த ஆண்டில் ஒன்றரை லட்சம் ஹெக்டர் அளவுக்கு கரும்பு சாகுபடி நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலாக 55 ஆயிரம் ஹெக்டர் கரும்பு பயிர் செய்யப்படுகிறது. அங்கக வேளாண்மைக்காக தனி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார்.

டாபிக்ஸ்