தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl: Eliminator: Nat Sciver-brunt Half Centy, Amelia Kerr Cameo Guides Mumbai Indians To Post 182 Runs

WPL: அதிரடி தாண்டவமாடிய பிரண்ட்!இறுதிக்கு செல்ல யுபிக்கு 183 ரன்கள் இலக்கு

Mar 24, 2023, 09:42 PM IST

பைனலுக்கு தகுதி பெறும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் பார்மில் இருக்கும் மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஏமாற்றியபோதிலும், மற்றொரு டாப் ஆர்டர் பேட்டர் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அதிரடி தாண்டவம் ஆடினார். இவருடன் அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகரின் கேமியா இன்னிங்ஸால் இமலாய ஸ்கோரை குவித்துள்ளது மும்பை. (PTI)
பைனலுக்கு தகுதி பெறும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் பார்மில் இருக்கும் மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஏமாற்றியபோதிலும், மற்றொரு டாப் ஆர்டர் பேட்டர் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அதிரடி தாண்டவம் ஆடினார். இவருடன் அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகரின் கேமியா இன்னிங்ஸால் இமலாய ஸ்கோரை குவித்துள்ளது மும்பை.

பைனலுக்கு தகுதி பெறும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் பார்மில் இருக்கும் மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஏமாற்றியபோதிலும், மற்றொரு டாப் ஆர்டர் பேட்டர் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அதிரடி தாண்டவம் ஆடினார். இவருடன் அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகரின் கேமியா இன்னிங்ஸால் இமலாய ஸ்கோரை குவித்துள்ளது மும்பை.

பைனலுக்கு தகுதி பெறும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் பார்மில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஏமாற்றியபோதிலும், மற்றொரு டாப் ஆர்டர் பேட்டர் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அதிரடி தாண்டவம் ஆடினார். இவருடன் அமெலியா கெர், பூஜா வஸ்த்ராகர் கேமியா இன்னிங்ஸால் இமலாய ஸ்கோரை குவித்தது மும்பை.

ட்ரெண்டிங் செய்திகள்

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

Paris Olympics: ‘பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க கூடைப்பந்து அணியில் இடம்பிடிப்பேன்’-முன்னணி வீராங்கனை நம்பிக்கை

மகளிர் ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

வழக்கம் போல் மும்பை ஒபனர்கள் யாஸ்திகா பாட்யா, ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். பாட்யா 21, மோத்யூஸ் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

தொடரின் தொடக்க போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருந்து, பின்னர் கடைசி கட்ட போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய மும்பை அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், இன்றைய போட்டியிலும் ஏமாற்றினார். 14 ரன்னில் அவர் நடைய கட்டிய நிலையில், மற்றொரு டாப் ஆர்டர் பேட்டரான நாட் ஸ்கிவர்-பிரண்ட் ரன்குவிப்பில் ஈடுபட்டர்.

தொடக்கம் முதல் அதிரடி காட்டி வந்த இவர், பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். அரை சதம் அடித்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் 38 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் கடைசி கட்டத்தில் பேட் செய்த அமெலியா கெர் கேமியோ இன்னிங்ஸ் விளையாடி 29 ரன்கள் எடுத்து அவுட்டானர்.

இவரை தொடர்ந்து வந்த பூஜா வஸ்த்ரகர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து சிறப்பாக பினிஷ் செய்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் மும்பை அணி 18 ரன்கள் விளாசியது.

யுபி பெளலர்களில் அஞ்சலி சர்வானி, கிரேஸ் ஹாரிஸ் தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கினர். சோஃபி எக்லெஸ்டோன் 39 ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டாபிக்ஸ்