தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  India Odi Squad: இந்த முறை ஆக்ரோஷமா இருக்கும்… ‘அதிவேக’ இந்திய அணி அறிவிப்பு!

India ODI squad: இந்த முறை ஆக்ரோஷமா இருக்கும்… ‘அதிவேக’ இந்திய அணி அறிவிப்பு!

Nov 24, 2022, 09:15 PM IST

புதிய பவுலர்களுடன் பங்களாதேஷை துவம்சம் செய்ய புறப்படுகிறது இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி.
புதிய பவுலர்களுடன் பங்களாதேஷை துவம்சம் செய்ய புறப்படுகிறது இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி.

புதிய பவுலர்களுடன் பங்களாதேஷை துவம்சம் செய்ய புறப்படுகிறது இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி.

தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டிசம்பரில் பங்களாதேஷ் அணியுடன் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அந்த தொடருக்கான ஒருநாள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தயாள், இந்த அணியில் இடம் பெற முதலில் அழைப்பை பெற்றார். அதன்பின் முதுகில் ஏற்பட்ட பிரச்சினையால் மூன்று போட்டிகள் கொண்ட அத்தொடரில் இருந்து அவர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நியூசிலாந் சென்றுள்ள இந்திய ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற வேண்டிய ‘எக்ஸ்பிரஸ் விரைவு’ பந்துவீச்சாளர் குல்தீப் சென், தயாளுக்கு பதிலாக வங்காளதேசத்திற்கு எதிரான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இதற்கிடையில், ஜடேஜா, செப்டம்பர் மாதம் முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் அறிமுகமான ஷாபாஸ், ஜடேஜாவுக்கு பதிலாக களமிறக்கும் வாய்ப்பை பெற்றார்.

சென் மற்றும் ஷாபாஸ் இருவரும் ஒருநாள் போட்டிக்கான அணிக்காக நியூசிலாந்திற்கு செல்லவிருந்தனர், ஆனால் அதற்கு பதிலாக வங்காளதேசம் செல்லும் இந்திய ஒருநாள் அணியில் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஜடேஜா மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் இருந்த நிலையில், அவரது உடற்தகுதி மேம்பாட்டதால் ஒருநாள் அணியில் அவருக்கும் இடம் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதோ பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு விபரம்:

பங்களாதேஷ் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்)

கேஎல் ராகுல் (துணை கேப்டன்)

ஷிகர் தவான்

விராட் கோலி

ரஜத் படிதார்

ஷ்ரேயாஸ் ஐயர்

ராகுல் திரிபாதி

ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்)

இஷான் கிஷான்

ஷாபாஸ் அகமது

அக்சர் படேல்

வாஷிங்டன் சுந்தர்

ஷர்துல் தாக்கூர்

முகமது ஷமி

முகமது சிராஜ்

தீபக் சாஹர்

குல்தீப் சென்

 

நியூசிலாந்து ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்)

ஷுப்மான் கில்

தீபக் ஹூடா

சூர்யகுமார் யாதவ்

ஷ்ரேயாஸ் ஐயர்

ரிஷப் பந்த் (துணை கேப்டன்)

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

வாஷிங்டன் சுந்தர்

ஷர்துல் தாக்கூர்

யுஸ்வேந்திர சாஹல்

குல்தீப் யாதவ்

அர்ஷ்தீப் சிங்

தீபக் சாஹர்

உம்ரான் மாலிக்

டாபிக்ஸ்