தமிழ் செய்திகள்  /  Sports  /  Rajasthan Royals Off-spinner Ravichandran Ashwin Was On Thursday Fined 25 Per Cent

Ravichandran Ashwin: அஸ்வினுக்கு போட்டிக்கான கட்டணத்தில் 25 % அபராதம்-காரணம்?

Manigandan K T HT Tamil

Apr 13, 2023, 07:56 PM IST

IPL 2023: ராஜஸ்தானுக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். (PTI)
IPL 2023: ராஜஸ்தானுக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார்.

IPL 2023: ராஜஸ்தானுக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ஆட்டம் மீண்டும் ஏப்.12 அன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 6 விக்கெட்டுகளை இழந்தது.

ராஜஸ்தானுக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார்.

இந்த ஆட்டத்தில் அவர் பேட்டிங்கில் 30 ரன்களை விளாசினார். 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விரட்டினார். பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2 வைடு பந்துகளையும் வீசினார். ரஹானே, துபே ஆகியோரை எல்பிடபிள்யூ செய்து ஆட்டமிழக்கச் செய்தார். இருவருமே முக்கியமான விக்கெட்டுகள் ஆகும். இவர் எடுத்த விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது எனலாம்.

அஸ்வின்

இந்த ஆட்டத்தில் கள நடுவர்களின் முடிவை வெளிப்படையாக விமர்சனம் செய்ததாக அஸ்வினுக்கு போட்டிக்கான கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக நடுவர்கள் தானாகவே பந்தை மாற்றியது தொடர்பாக அஸ்வின் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை அவர் மீறியதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

"ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.7 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை அஸ்வின் ஒப்புக்கொண்டார்" என்று ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்