தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ravichandran Ashwin: மன்கட் அவுட்டுக்கு அஸ்வின் பிளான்.. சுதாரித்த ஷிகர் தவன்!

Ravichandran Ashwin: மன்கட் அவுட்டுக்கு அஸ்வின் பிளான்.. சுதாரித்த ஷிகர் தவன்!

Manigandan K T HT Tamil

Apr 06, 2023, 09:04 AM IST

Shikhar Dhawan: வெற்றிக்கு அருகில் சென்ற ராஜஸ்தான் அணி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.
Shikhar Dhawan: வெற்றிக்கு அருகில் சென்ற ராஜஸ்தான் அணி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.

Shikhar Dhawan: வெற்றிக்கு அருகில் சென்ற ராஜஸ்தான் அணி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.

ஐபிஎல் 2023 சீசனில் 8வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி தொடக்க பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங் அதிரடி, ஷிகர் தவான் நங்கூர ஆட்டத்தால் 20 ஓவரில் 197 ரன்கள் குவித்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

Federation Cup 2024: ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியில் ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்பு

இதைத்தொடர்ந்து 198 ரன்கள் என மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி திடீர் டுவிஸ்டாக பெளலிங் ஆல்ரவுண்சர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது. ஆனால் இந்த பரிசோதனை முயற்சி அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.

அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனும் இளம் வீரருமான ஜெய்ஸ்வால் 11, பட்லர் 19 என பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாமல் அவுட்டானார்கள்.

வெற்றிக்கு அருகில் சென்ற ராஜஸ்தான் அணி எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.

முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் விளையாடியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

அவர் 7வது ஓவரை வீசியபோது திடீரென பாதியிலேயே நின்று ஸ்டம்ப்பை திரும்பிப் பார்த்தார். அப்போது நான்-ஸ்டிரைக்கராக நின்றுகொண்டிருந்த ஷிகர் தவன் கோட்டுக் வெளியே இருந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட தவன், சட்டென்று கோட்டில் பேட்டை வைத்தார்.

அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்ய பிளான் போட்டது பின்னர் தெரியவந்தது. இருவரும் பரஸ்பரம் புன்னகை செய்தனர்.

முன்பு ஒருமுறை ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்யதது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது பட்லரும், அஸ்வினும் ஒரே அணியில் தான் விளையாடி வருகின்றனர்.

நேற்றைய தினம் ஷிகர் தவனை அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தபோது பீல்டிங் செய்துகொண்டிருந்த பட்லர் முகத்தை கேமிராமேன் ஃபோகஸ் செய்தார்.

ரசிகர்களும் ஆர்ப்பரிக்க தொடங்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர், இந்த ஆட்டத்தில் 56 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பஞ்சாப் கேப்டன் தவன். அவர் 3 சிக்ஸர்களையும் 9 பவுண்டரிகளையும் விளாசினார். மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த பரம்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி