தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  India Vs Sri Lanka: பேட்ஸ்மேன்களை பஞ்சராக்கிய பவுலர்கள்.. ரோஹித் நிகழ்த்திய மாயம்! - இந்தியாவுக்கு டார்க்கெட் எவ்வளவு?

India vs sri lanka: பேட்ஸ்மேன்களை பஞ்சராக்கிய பவுலர்கள்.. ரோஹித் நிகழ்த்திய மாயம்! - இந்தியாவுக்கு டார்க்கெட் எவ்வளவு?

Aug 02, 2024, 07:06 PM IST

google News
இந்தியா இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிற்கு எவ்வளவு ரன்கள் இலக்காக வைத்திருக்கிறது என்பதை பார்க்கலாம். (bcci)
இந்தியா இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிற்கு எவ்வளவு ரன்கள் இலக்காக வைத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்தியா இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிற்கு எவ்வளவு ரன்கள் இலக்காக வைத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது, கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. விராட் கோலி, கே.எல். ராகுல், மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் ஒரு நாள் அணியில் இணைந்துள்ளனர்.

டாஸ் வென்ற இலங்கை அணி

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது. பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணியில் இருந்து, ஓப்பனர்களாக அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் பதும் நிசாங்கா ஆகியோர் களமிறங்கினர். அவிஷ்கா 1 ரன் எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து, பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். 

இதற்கடுத்தபடியாக வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறி இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் மறுமுனையில் நிசாங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து அசத்தினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி நம்பிக்கை சேர்த்துக்கொண்டிருந்தார். 

8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவரும் 56 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் ஆட்டமிழக்கும்போது இலங்கை அணி 26.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 7 ஆவது வீரராக களமிறங்கிய துனித் வெலாலகே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால் இலங்கை 200 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது. இறுதியாக 50 வது ஓவரில் இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து இருக்கிறது. வெலாலகே கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 65 பந்தில் 66 ரன்கள் எடுத்திருந்தார். 

இந்திய அணி சார்பாக, முகமது சிராஜ், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தனர். 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி இருக்கிறது. 3 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில் இந்திய அணி 23 ரன்கள் எடுத்திருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி