HT Sports Special: முதல் சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஒரே வீரர்!
Jun 14, 2023, 04:45 AM IST
TNPL 2016 Record: முதல் சீனில் சதம் விளாசிய ஒரே வீரர் இவர் தான். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த ஆட்டத்திலும் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
7வது சீசன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளையை எதிர்கொண்டது விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணி.
முதலில் விளையாடிய காரைக்குடி காளை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை குவித்தது.
அந்த அணியின் ராஜாமணி ஸ்ரீநிவாசன் அரை சதம் விளாசினார்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருவள்ளூர் வீரன்ஸ் விளையாடியது.
அந்த அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஹரி நிஷாந்த், என்.எஸ்.சதுர்வேத் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 3வது வீரராக களமிறங்கி நம்பிக்கை அளித்தார் பாபா அபராஜித். அந்த ஆட்டத்தில் 63 பந்துகளில் 118 ரன்களை எடுத்ததுடன், 12 ஃபோர்ஸ், 6 சிக்ஸர்களை விளாசினார் பாபா அபராஜித்.
முதல் சீனில் சதம் விளாசிய ஒரே வீரர் இவர் தான். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த ஆட்டத்திலும் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
சென்னையில் பிறந்தவரான பாபா அபராஜித்துக்கு தற்போது 28 வயது ஆகிறது.
இந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வழிநடத்தி வருகிறார் பாபா அபராஜித்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்