TNPL Records: டிஎன்பிஎல் முதல் சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்ஸ்!
Jun 13, 2023, 06:50 AM IST
Tamilnadu Premier Leauge 2023: கடந்த 2016 சீசனில் அதாவது முதல் சீசன் டிஎன்பிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 பவுலர்கள் யார் யார் என பார்க்கலாம்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.
7-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி நேற்று கோலாகலமாக கோவையில் தொடங்கியது. முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி வெற்றியுடன் சீசனை தொடங்கியிருக்கிறது.
2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
கடந்த 2016 சீசனில் அதாவது முதல் சீசன் டிஎன்பிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பவுலர்கள் யார் யார் என பார்க்கலாம்.
ஆண்டனி தாஸ்
இவர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக முதல் சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடி, 24 ஓவர்கள் வீசினார். மொத்தம் 171 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், 14 விக்கெட்டுகளை எடுத்தார். இவரது எக்கானமி 7.12.
அஸ்வின் எம்
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இடம்பிடித்து முதல் சீசனில் பவுலிங்கில் கலக்கியவர் அஸ்வின். இவர் 8 ஆட்டங்களில் விளையாடி 211 ரன்களை விட்டுக் கொடுத்து 13 விக்கெட்டுகளை தூக்கினார். இவரது பெஸ்ட் பவுலிங் ரேட் 24/3. எக்கானமி 6.8.
ஹரிஷ் குமார்
லைகா கோவை கிங்ஸ் அணி பவுலர் ஹரிஷ் குமார் 8 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 31 ஓவர்களை வீசினார். அதில் அவர் 218 ரன்களை விட்டுக் கொடுத்து 13 விக்கெட்டுகளை எடுத்தார். இவரு பெஸ்ட் 20/3. எக்கானமி 7.03.
சாய் கிஷோர்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரரான சாய் கிஷோர், 9 ஆட்டங்களில் விளையாடி 34 ஓவர்களை வீசினார். அவர் மொத்தம் 181 ரன்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது பெஸ்ட் 12/3. எக்கானமி 5.32.
அஸ்வின் கிறிஸ்ட்
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பவுலர் அஸ்வின் கிறிஸ்ட், 9 ஆட்டங்களில் விளையாடி 32 ஓவர்களை வீசினார். மொத்தம் 208 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், 12 விக்கெட்டுகளை சாய்த்தார். இவரது பெஸ்ட் 19/3. எக்கானமி 6.5.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்