தமிழ் செய்திகள்  /  Sports  /  Hbd Hasim Amla Highest Test Scorer For South Africa

HBD Hasim Amla: தென் ஆப்பிரிக்காவுக்காக டெஸ்டில் அதிக ஸ்கோரை பதிவு செய்த வீரர்!

Manigandan K T HT Tamil

Mar 31, 2023, 05:50 AM IST

South Africa Team: ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 15, 16, 17, 18 மற்றும் 20வது சதங்களை பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஹசிம் அம்லா.
South Africa Team: ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 15, 16, 17, 18 மற்றும் 20வது சதங்களை பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஹசிம் அம்லா.

South Africa Team: ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 15, 16, 17, 18 மற்றும் 20வது சதங்களை பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஹசிம் அம்லா.

ஹசிம் அம்லா, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆவார். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு நாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

அவருக்கு இன்று (மார்ச் 31) பிறந்த நாள். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1983ம் ஆண்டு பிறந்தார் ஹசிம் அம்லா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். சூரத் நகரில் இருந்து இவரது தாத்தா தென் ஆப்பிரிக்காவிற்கு 1927-ம் ஆண்டு குடிபெயர்ந்தார்.

டர்பன் உயர்நிலைப் பள்ளியில் படித்த அம்லாவின் சகோதரர் அகமது அம்லாவும் கிரிக்கெட் வீரர் தான். ஹசிம் அம்லா, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்காக 2004ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். அவர் தென் ஆப்பிரிக்க அணியில் 295-வது டெஸ்ட் வீரர் ஆவார்.

வலது கை ஆட்டக்காரரான இவர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியை 2014 ஜூன் மாதம் முதல் 2016 ஜனவரி வரை வழி நடத்தியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 2012ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். அவர் கடைசி வரை அந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக உள்ளது.

அவருக்கு அடுத்த இடத்தில்தான் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளார். அவர் 278 ரன்கள் நாட் அவுட் சாதனையை வைத்திருக்கிறார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 15, 16, 17, 18 மற்றும் 20வது சதங்களை பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஹசிம் அம்லா.

மொத்தம் 124 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 9,282 ரன்களை குவித்துள்ளார். அதில் 28 சதங்களும், 41 அரை சதங்களும் அடங்கும்.

அம்லா

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2008ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார் அம்லா. மொத்தம் 181 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 8,113 ரன்களைக் குவித்துள்ளார்.

அதில் 27 சதங்களும், 39 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 159.

டி20 கிரிக்கெட்டில் அம்லா, 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார்.

மொத்தம் 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 1,277 ரன்களை பதிவு செய்துள்ளார். அதில் 8 அரை சதங்கள் அடங்கும்.

அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் இருந்தும் கடந்த ஜனவரி 18ம் தேதி அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அம்லா.

டாபிக்ஸ்