தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sachin Vs Team India: ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. அஷ்வினை ஏன் சேர்க்கல?’ துணிந்து எதிர்க்கும் சச்சின்!

Sachin Vs Team India: ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. அஷ்வினை ஏன் சேர்க்கல?’ துணிந்து எதிர்க்கும் சச்சின்!

Jun 12, 2023, 05:55 AM IST

google News
அஸ்வினின் தேர்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சினும் நேரடியாக கேள்வி எழுப்பியிருப்பதால் இந்த விவகாரம் உண்மையில் கவனிக்க வேண்டிய விசயம் தான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன் டிராபியை இந்திய கிரிக்கெட் அணி இழந்த நிலையில், பலரும் விமர்சித்து வருகின்றனர். பெரும்பாலானோர் சொல்லும் காரணங்களில் முக்கியமாக இருப்பது, ‘டெஸ்ட் போட்டியின் முதன்மை பவுலரான அஷ்வினை ஏன் அணியில் சேர்க்கவில்லை’ என்பது தான்.

தொடர்ந்து டெஸ்ட் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்ந்தி வரும் தமிழக வீரரான அஷ்வினை, முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் சாம்பியன் போட்டியில் சேர்க்காதது, பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்குப் பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். அவரது இடுகையில்,

‘‘உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஸ்டீவ் ஸ்மித் மறஅறம் ட்ரெவிஸ் ஹெட் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சரியான அடித்தளத்தை ஆஸ்திரேலிய அணித்து அமைத்து கொடுத்தனர் ஆட்டத்தில் நிலைத்திருக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர்களால் முடியவில்லை. டீம் இந்தியாவிற்கு சில நல்ல தருணங்கள் இருந்தன, ஆனால் அந்த தருணங்கள் விலக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளராக இருக்கும் அஷ்வின், ஆடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை. அஸ்வின் விலக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் போட்டிக்கு முன்பு குறிப்பிட்டது போல், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் டர்னிங் டிராக்குகளை நம்புவதில்லை, அவர்கள் காற்றில் சறுக்குவதைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றின் மாறுபாடுகளை மறைக்க மேற்பரப்பில் இருந்து குதிப்பார்கள். ஆஸ்திரேலியாவின் டாப் 8 பேட்டர்களில் 5 இடது கை வீரர்கள் இருந்ததை மறந்துவிடக் கூடாது. அப்படி இருந்தும் அஷ்வின் இல்லை,’’
என்று அந்த ட்விட்டரில் சச்சின் கூறியுள்ளார்.

அஸ்வினின் தேர்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சினும் நேரடியாக கேள்வி எழுப்பியிருப்பதால் இந்த விவகாரம் உண்மையில் கவனிக்க வேண்டிய விசயம் தான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி