தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  டி20 கிரிக்கெட்டில் டுவெய்ன் பிரோவோ முதல் ஆளாக செய்த சாதனை!

டி20 கிரிக்கெட்டில் டுவெய்ன் பிரோவோ முதல் ஆளாக செய்த சாதனை!

Aug 13, 2022, 09:57 AM IST

அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் சேர்த்து 600 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவெய்ன் பிராவோ. (IPL/CSK)
அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் சேர்த்து 600 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவெய்ன் பிராவோ.

அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டில் சேர்த்து 600 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டுவெய்ன் பிராவோ.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2011 முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெளலிங் ஆல்ரவுண்ராக இருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவெய்ன் பிராவோ. இவர் ஐபிஎல் தவிர பல்வேறு நாடுகளிலும் நடத்தப்படும் டி20 தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

38 வயதாகும் பிராவோ, தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் டி20 போட்டியில், நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதையடுத்து ஓவல் இன்விசிபிள்ஸ் என்ற அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ, டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை புரிந்த முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ புரிந்துள்ளார்.

சர்வதேச டி20 மற்றும் உள்ளூர் டி20 லீக்குகள் என மொத்தமாக 545 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பெளலில் 5/23 என உள்ளது.

பெளலிங்கை போல் பேட்டிங்கில் கலக்கியுள்ள பிராவோ 6850 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 70 நாட் அவுட் உள்ளது. அதேபோல் 256 கேட்ச்களையும் அவர் பிடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் டுவெயின் பிராவோவும், இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரசீத் கான் 466 விக்கெட்டுகளுடனும், மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் மிஸ்ட்ரி ஸ்பின்னர் சுனில் நரைன் 460 விக்கெட்டுகளுடனும் உள்ளார்கள்.