தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கலக்கும் செஸ் ஒலிம்பியாட் 2022: விழாக்கோலம் பூண்டுள்ள சென்னை!

கலக்கும் செஸ் ஒலிம்பியாட் 2022: விழாக்கோலம் பூண்டுள்ள சென்னை!

Jul 28, 2022, 11:43 AM IST

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று (ஜூலை 28) கோலாகலமாக தொடங்க இருக்கின்றன. இதையொட்டி சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளன.

  • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று (ஜூலை 28) கோலாகலமாக தொடங்க இருக்கின்றன. இதையொட்டி சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளன.
சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதி வரையிலான வழித்தடத்தில் உள்ள கருப்பு, வெள்ளை பெயின்டிங் மற்றும் ஓவியங்கள், பதாகைள் அனைவரையும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.
(1 / 10)

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓர் அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான மற்றொரு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
(2 / 10)

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 
(3 / 10)

செஸ் ஒலிம்பியாட் தொடரையொட்டி மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள சிற்பக்கலை தூண்.
(4 / 10)

செஸ் போர்ட் வடிவில் மிளிரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம்.
(5 / 10)
செஸ் போர்ட் வடிவில் மிளிரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம்.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கம் முழுவதுமே அதிவேக 5ஜி இண்டர்நெட் சேவை கொடுக்கப்பட உள்ளது.
(6 / 10)

தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக, வேட்டி அணிந்து வணக்கத்துடன் அனைவரையும் வரவேற்கும் செஸ் போட்டிக்கான சின்னமான ‘தம்பி’ உருவம் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
(7 / 10)

விமானம், மெட்ரோ இரயில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்திற்கான வாகனங்களிலும் செஸ் போட்டிக்கான விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
(8 / 10)

சர்வதேச விளையாட்டு வீரர்களை வரவேற்க அமைக்கப்பட்டுள்ள 'தம்பி குடும்பம்'.
(9 / 10)
சர்வதேச விளையாட்டு வீரர்களை வரவேற்க அமைக்கப்பட்டுள்ள 'தம்பி குடும்பம்'.
இந்தியாவைச் சேர்ந்த ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 2 அணியும் மொத்தம் 5 அணிகள் என 25 பேர் களமிறங்குகின்றனர். இந்திய அணிகளில் பிரக்ஞானந்தா, வைஷாலி, சசிகரண், அதிபன், குகேஷ், கார்த்திகேயன், சேதுராமன் ஆகிய 7 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை