தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kharge About Pm : ’இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் யார்?’ செய்தியாளர்களிடம் போட்டு உடைத்த மல்லிகார்ஜுன கார்கே!

Kharge About PM : ’இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் யார்?’ செய்தியாளர்களிடம் போட்டு உடைத்த மல்லிகார்ஜுன கார்கே!

Kathiravan V HT Tamil

May 21, 2024, 09:56 PM IST

google News
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வோம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார். (PTI)
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வோம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வோம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வோம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார். 

பிரதமர் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் ஆண்டார்

ஹரியானா மாநிலம் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் வருவார்கள்’ என்ற பிரதமர் மோடியின் கூற்றுக்கு பதில் அளித்த அவர், 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின்போது கூட இதே போன்ற விஷயங்கள் கூறப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் இரண்டு ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்ததாக கூறினார்.  

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளாக  பஞ்சாப்  வந்த ஒருவர் பிரதமராக பொறுப்பேற்று நாட்டை நடத்தி, அதன் பொருளாதாரத்தை மாற்றியவர் என்றும் மன்மோகன் சிங்கிற்கு கார்கே புகழாரம் சூட்டினார். 

பிரதமர் யார்?

பாஜகவை விமர்சித்த அவர், "அவர்கள் 10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை" என்று கூறினார். தேர்தலுக்குப் பிறகு இந்திய கூட்டணிக் கட்சிகள் அமர்ந்து பிரதமரை முடிவு செய்யும் என்று கூறிய கார்கே, காங்கிரஸுக்கோ அல்லது இந்தியக் கூட்டணிக்கோ மோடியைப் போன்ற முகம் இல்லை என்று பாஜக கூறி வருகிறது என்றார். 2004-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் இதே கருத்தைத்தான் சொன்னார்கள் ஆனால் தேர்தலுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகள் அமர்ந்து பிரதமரை தேர்வு செய்வோம் என்றார். 

எங்களுக்கு ஆதாயம்! அவர்களுக்கு இழப்பு 

இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி நல்ல இடங்களை பெற்று உள்ளதாக கூறிய அவர், எல்லா இடங்களிலும் நாங்கள் ஆதாயம் அடைகிறோம். பாஜகவினர் ஆதரவை இழக்கிறார்கள் என குறிப்பிட்டார். 

மோடி அரசாங்கத்தை ஆட்சிக்கு வருவதை எங்கள் கூட்டணி நிச்சயமாக தடுக்கும். மோடிக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்று கூறினார். 

அரசியல் சாசனத்திற்கு ஆபத்து 

அரசியல் சாசனம் ஆபத்தில் இருப்பதாக காங்கிரஸ் கூறுவது ஏன் என்ற கேள்விக்கு, பதில் அளித்த கார்கே, “பாஜகவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 2014ல் கூறியுள்ளனர் என தெரிவித்தார். 

சுயாட்சி அமைப்புகளை பாஜக நீர்த்துப்போகச் செய்வதாக அவர் குற்றம் சாட்டிய கார்கே, அமலாக்க இயக்குனரகத்தை (ED) உள்துறை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது என கூறினார். 

முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து காங்கிரஸ் பேசியதாக ராகுல் காந்தி மீது மோடி குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, தாம் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை என்றார் என்ற அவர், தனக்கு அனைவரும் சமம் என்று மோடி கூறுகிறார் ஆனால் அடுத்த நாளே சிறுபான்மையினரை விமர்சிக்கிறார் என தெரிவித்தார். 

தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி 

எதன் அடிப்படையில் எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் சிறப்பாக செயல்படும் என்றும் கார்கே கூறினார். 

அடுத்த செய்தி