தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Kathiravan V HT Tamil
May 16, 2024 05:57 PM IST

”Mamata Banerjee vs Adhir Ranjan Chowdhury: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி கூறி இருந்த நிலையில் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சு விரிசலை அதிகமாக்கி உள்ளது”

’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!
’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

ட்ரெண்டிங் செய்திகள்

’மம்தா பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு’ 

இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசி உள்ள அவர், மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக எண்ணிக்கை பெற்றால் பாஜகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் உடனான  கூட்டணியை மம்தா பானர்ஜி முறித்ததால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தா பானர்ஜி ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வரிசையில் நிற்பதாக கூறி உள்ளார். 

வரும் மே 20ஆம் தேதி அன்று ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் அரசியல் ரீதியாக பேசுபொருள் ஆகி உள்ளது. 

மம்தா சொன்னது என்ன?

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்து உள்ள இந்தியா கூட்டணியின் முக்கிய முகங்களில் ஒருவராக மம்தா பானர்ஜி இருந்தபோதிலும், அவர் முதலமைச்சராக உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்த இடங்களையும் ஒதுக்காமல் நேரடியாக போட்டியிடுகிறார். 

இதனால் அம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்குக் காரணம். தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றாலும், இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறவில்லை. 

4 கட்ட நாடாளுமன்றத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என நேற்றைய தினம் (15-04-2024) மம்தா பானர்ஜி கூறி இருந்தார். 

இந்தியா கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம்

வெளியில் இருந்து ஆதரவு என்பது இந்தியா வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தால் திரிணாமுல் அரசாங்கம் அமைப்பதில் சேராது, ஆனால் அதன் கூட்டாளியாக இருந்து மசோதாக்களில் அதற்கு வாக்களிக்கும். 

400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுகிறது, ஆனால் அது நடக்காது என்று மக்கள் கூறுகிறார்கள். பாஜக திருடர்கள் நிறைந்த கட்சி என்பதை ஒட்டுமொத்த நாடும் புரிந்து கொண்டுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க இந்திய அணியை வெளியில் இருந்து நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆதரிப்போம்" என பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், "மேற்கு வங்காளத்தில், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் ஒருபோதும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருக்க நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குவோம். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கும் பிரச்சினைகள் இல்லை" என்று மம்தா கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலும், மே 25ஆம் தேடி அன்று 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.

IPL_Entry_Point