தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Union Government Blocks 67 Porn Websites

Govt blocks 67 porn sites: 67 ஆபாச இணையதளங்கள் முடக்கம் - ஒன்றிய அரசு நடவடிக்கை

Karthikeyan S HT Tamil

Sep 30, 2022, 12:01 PM IST

67 ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
67 ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

67 ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி: தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி 67 ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

HT interview: 'தமிழ்நாடு செய்ததை இந்தியா முழுவதும் செய்ய வேண்டும்!’ இந்துஸ்தான் டைம்ஸ்க்கு சரத்பவார் பேட்டி!

Elon Musk arrives in China: இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த சில நாட்களில் சீனா சென்ற பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்!

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி வாக்கத்தான்

ஆபாச இணையதளங்கள் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக பார்க்கின்றன. இந்தியாவை குறிவைத்து ஏராளமான இணையதளங்கள் இயங்கி வருகின்றன. இணைய வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் ஆபாச இணையதளங்களை முடக்கும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, இணைய வழிகாட்டு விதிமுறை மீறல்களில் ஈடுபடும் தளங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்து முடக்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது 67 ஆபாச இணையதளங்களை முடக்கி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புணே நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 63 இணையதளங்களும், உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 4 ஆபாச இணையதளங்களும் முடக்கப்படுகின்றன. இந்த இணையதளங்கள் பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ஆபாசத்தை பரப்பும் விதமாகவும் செயல்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்