தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Uttarakhand:உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து - 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 15 பேர் படுகாயங்களுடன் மீட்பு

Uttarakhand:உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து - 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 15 பேர் படுகாயங்களுடன் மீட்பு

Marimuthu M HT Tamil

Jun 15, 2024, 03:04 PM IST

google News
Uttarakhand: உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (HT photo)
Uttarakhand: உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Uttarakhand: உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Uttarakhand: உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் என்னும் ஊரில் டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து:

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் என்னும் ஊரில், ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. அப்போது நீரில் சென்று விழுந்ததில் வாகனத்தில் இருந்த 8 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர் என்று உத்தரகாண்ட் மாநிலப் பேரிடர் மற்றும் மீட்புப் படை கமாண்டன்ட் மணிகாந்த் மிஸ்ரா தகவல் தெரிவித்தார்.

மேலும், காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று மாநிலப் பேரிடர் மற்றும் மீட்புப் படை அலுவலர் மேலும் கூறினார். 

டெம்போ டிராவலரில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று மணிகாந்த் மிஸ்ரா கூறினார்.

 விபத்து நடந்த இடத்தில் மாநிலப் பேரிடர் மற்றும் மீட்புப் படையினர் மற்றும் போலீஸ் குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக என்.ஐ.ஏ. செய்திமுகமை தெரிவித்துள்ளது. சற்றுமுன், காயமடைந்த இருவர் ஆம்புலன்ஸில் மீட்புப்படையினரால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் விபத்து குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கருத்து:

இந்த விபத்து சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "ருத்ரபிரயாக் சாலை விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள், ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்கள். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது’’எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ருத்ரபிரயாக் மாவட்டத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உள்ளூர் நிர்வாகம் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் அவர், "இறந்தவர்களின் ஆத்மாக்கள் இறைவனின் பாதத்தில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன். இந்த பெரும் வலியைத் தாங்க, துயரமடைந்த குடும்பத்திற்கு வலிமையை வழங்கவும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பாபா கேதாரை பிரார்த்திக்கிறேன்" என்று உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். 

ராஜஸ்தானில் ஏற்பட்ட மற்றொரு விபத்து:

அதேபோல், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பரத்பூரில் உள்ள ஆர்.பி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பிரதாப் சிங் (57) மற்றும் ஹர்பன் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் பயானாவில் இருந்து பரத்பூர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. கடுகு ஆராய்ச்சி மையம் அருகே லாரி நேருக்கு நேர் பேருந்து மீது மோதியது. இதையடுத்து லாரி ஒரு வீட்டின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். இதையடுத்து பஸ், லாரி ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி