Uttarakhand tunnel evacuated: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Uttarakhand Tunnel Evacuated: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு

Uttarakhand tunnel evacuated: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு

Manigandan K T HT Tamil
Nov 28, 2023 08:08 PM IST

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கான 17 நாள் நீண்ட காத்திருப்பு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

உத்தர்காஷியில் சில்கியாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருந்த நிலையில் மீட்புப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
உத்தர்காஷியில் சில்கியாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருந்த நிலையில் மீட்புப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. (ANI)

"ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்..." என்று மீட்புக் குழுவின் பொறியாளர் சந்திரன் செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் சிலக்யாரா - தண்டல்காவல் இடையே மலையை குடைந்து நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது கடந்த 12ஆம் தேதி அன்று திடீரென சுரங்கம் இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 17-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும்பணி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முதல்கட்டமாக சுரங்கப்பாதையில் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தது.

தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் கயிறு, விளக்குகள், ஸ்ட்ரக்சர்கள் போன்ற உபகரணங்களுடன் சுரங்கத்தின் முன்னால் இருப்பதை காண முடிந்தது. இந்தச் சிக்கலான மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேவையான உபகரணங்களுடன் குழாய் வழியாக மறுமுனைக்கு முதலில் உள்ளே சென்று அங்கு சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் தற்போதைய நிலையின் ஆய்வு செய்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளைத் தெரிவித்தார்கள். அதன் பிறகு மற்ற நடவடிக்கைகள் தொடங்கியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.