Tamil Live News Updates: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு-tamil live news updates breaking news live updates 28 november 2023 get tamil latest news liveblog - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு

Tamil Live News Updates: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு

Kathiravan V HT Tamil
Nov 28, 2023 10:50 PM IST

Tamil Live News Updates: இன்றைய (28.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

-பிரதமர் மோடி!

 

 

 

uttarakhand tunnel latest news: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கான 17 நாள் நீண்ட காத்திருப்பு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு தொழிலாளராக வெளியே வருகின்றனர்.

 

அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுகள்

 

இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அணி தடுமாறி வருகிறது.

 

நிலுவை மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல்

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருந்த 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் கான் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

டி20 உலககோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது நமீபியா!

மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என 19 நாடுகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகள் போட்டி போடவுள்ளன.

 

முன்னாள் அமைச்சரின் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து

Madurai High Court: குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமிக்கு ரூ.15.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு: டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு

Aptitude test: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிசம்பர் 1-ம் தேதி காலை 11 மணி வெளியிடப்பட உள்ளது. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வை 1,27,673 மாணவர்கள் எழுதினர். திறனாய்வுத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in-ல் முடிவை அறிந்து கொள்ளலாம்.

எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி சஸ்பெண்ட்

Suvendu Adhikari Suspended: சபாநாயகரை அவமரியாதை செய்ததாக கூறி மேற்கு வங்க சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்திருந்தபோது, சுவேந்து கடந்த ஆண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நம்பிக்கை

Uttarakhand tunnel rescue: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், "பாபா பவுக் நாக் ஜியின் கருணையினாலும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் கருணையினாலும், மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பாலும் சுரங்கத்துக்குள் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. விரைவில் தொழிலாளர் சகோதரர்கள் வெளியே கொண்டுவரப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகாசி சுரங்கப்பாதை - இறுதிக்கட்டத்தில் மீட்புப்பணி

UttarkashiTunnel: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிகட்டத்தை நெறுங்கியுள்ளது. 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவகுழுக்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Weather Update: திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (நவ.28) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை

Coimbatore: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஏசி வென்டிலேட்டர் மூலம் கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

Former AIADMK Minister Kamaraj case: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத் துறை அமைச்சராக இருந்த போது, பொருட்கள் கொள்முதலில், ரூ.350 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி தொடரந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

டிச.4-இல் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை

Kanniyakumari: நாகர்கோவில் புனித சவேரியர் தேவாலய திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

'மதுரை எய்ம்ஸ்; தலையிட முடியாது' - உச்சநீதிமன்றம்

Madurai AIIMS: மதுரை எம்ய்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது.

எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுக வேண்டும் - உச்சநீதிமன்றம்

2019ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கு ஒத்திவைப்பு

ADMK: அதிமுக பொதுக்குழு விவகார வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்திற்கு ஒத்திவைத்தது.

பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த மனு ஒத்திவைப்பு.

வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கடிதம் வழங்கிய நிலையில் கோரிக்கை ஏற்பு.

பிற வழக்குகளை தாமதிக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாக பதிவாளருக்கு இபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.

காலணி தொழிற்சாலை திறப்பு

MK Stalin: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ள காலணி தொழிற்சாலை மூலம் 4000 பேருக்கு வேலை 

2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் உறுதி

செல்வ கணபதி விடுதலை

TM Selvaganapthi : அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SenthilBalaji : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உத்தரகாசியில் 17வது நாளாக தொடரும் மீட்புப்பணி 

Uttarkashi tunnel rescue: உத்தராகண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து நடந்த இடத்தில் 17வது நாளாக மீட்புப்பணி நீடிக்கிறது.

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க கிடைமட்டமாக குழாய்களை அனுப்பும் பணி மும்முரம் 

15 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

Rain: இன்று காலை 10 மணி வரை கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மிதமான மழையும்,

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் ஓய்கிறது பரப்புரை

Telangana Election: சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில் இன்று மாலை உடன் பரப்புரை ஓய்கிறது

குஷ்பூ வீடு இன்று முற்றுகை

Kushboo vs Congress: பட்டியலின மக்களை அவதூறாக விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்கக்கோரி நடிகை குஷ்பு வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுகின்றனர்.

ஈபிஎஸ்க்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

EPS: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு

TM Selvaganapathi Case: முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மீதான சுடுகாட்டு கொட்டகை முறைக்கேட்டு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு

Chembarambakkam Lake: காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் இன்று திறக்கப்படுகிறது

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கிடைக்குமா?

SenthilBalaji : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

 

ED vs TNGovt: மணல்குவாரி விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிரான அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.