தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka High Court: 'சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல' - உயர் நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

Karnataka High Court: 'சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல' - உயர் நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

Karthikeyan S HT Tamil

Jun 01, 2023, 08:55 PM IST

Karnataka High Court: பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமல்ல என கர்நாடக உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு வழங்கியுள்ளது.
Karnataka High Court: பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமல்ல என கர்நாடக உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு வழங்கியுள்ளது.

Karnataka High Court: பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமல்ல என கர்நாடக உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமல்ல என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன். மதுபோதைக்கு அடிமையான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, வேலையை முடித்துவிட்டு அவ்வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 21 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜன் அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, உயிரற்ற அப்பெண்ணின் சடலத்தை அங்கிருந்து மறைவான இடத்துக்கு எடுத்துச் சென்ற ரங்கராஜன் அதனுடன் உடலுறவு செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ரங்கராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கை விசாரித்த தும்கூரு மாவட்ட நீதிமன்றம், பெண்ணை கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டதற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ரங்கராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: குற்றவாளி முதலில் அப்பெண்ணை கொலை செய்துள்ளார். எனவே, கொலை குற்றத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை ஏற்புடையது. ஆனால், அப்பெண்ணை கொலை செய்துவிட்டு வெறும் உயிரற்ற சடலத்துடன் தான் அவர் உடலுறவு கொண்டிருக்கிறார்.

உயிரற்ற ஒன்றுடன் உடலுறவு கொள்வதை பலாத்காரம் என சொல்ல முடியாது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் இது தண்டனைக்குரிய கற்பழிப்பு குற்றமாக கருதப்படாது என கருத்து தெரிவித்தனர். மேலும், ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்