தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Onam Festival: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

Onam Festival: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

Karthikeyan S HT Tamil

Sep 06, 2022, 02:24 PM IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

கேரள மாநிலத்தில் நாளை மறுதினம் (செப்டம்பர் 8) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (செப்.6) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறாா்.

நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதோடு ஓணம் பண்டிகை நாளான செப்டம்பர் 8ஆம் தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதேபோல், ஆன்லைனின் முன்பதிவு செய்யாமல் நேரடியாக கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு 10 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பின்னர் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.

டாபிக்ஸ்