தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Repo Rate Hike: ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு - முக்கிய செய்திகள்

Repo rate hike: ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil

Sep 30, 2022, 08:15 PM IST

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம் உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

குஜராத்தில் பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் டார்ஜிலிங்கில் உள்ள ஹோட்டலில் இறந்து கிடந்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என். திரிபாதி ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் போலி தங்க நாணயங்களை வைத்து சுமார் 30 லட்ச ரூபாயை மோசடி செய்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் பூனை கடித்ததற்கு மருத்துவமனையில் ஊசி போட வந்தவரை நாய் கடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் மேலும் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் அதிகாரபூா்வமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையம் வரை அந்த ரயிலில் பயணம் செய்தார்.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதேய் மிஸ்ரா இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று சாலை விபத்தில் சிக்கி பலியானார்.

பிகாரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடம் எடுத்து வருகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள கல்வி மையத்தில் இன்று காலை தற்கொலைப்படை நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிட்டது என்று ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் எடிட் செய்யும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

உத்தரப்பிரதேசம் மதுராவில் இரட்டைப் படுக்கையில் தூங்க ஆசைப்பட்டதால் தனது வளர்ப்பு மகனை தந்தை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சே அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபட்சே ஆகியோரை பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசினாா்.

வங்கிளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 75 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அம்ரித் மகோத்சவ் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி முகாம்களில் 16 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் ஒன்ரிய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனக் கூறி ப்ளே ஸ்டோரில் இருந்து 55 போலி கடன் செயலிகளை நீக்கி புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

டாபிக்ஸ்