தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rates Ate 581 Kanja: ‘581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டன யுவர் ஹானர்’!

Rates ate 581 Kanja: ‘581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டன யுவர் ஹானர்’!

I Jayachandran HT Tamil

Nov 24, 2022, 08:56 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் போலீஸார் தங்களது கஸ்டடியில் கிலோ கணக்கில் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இதில் 581 கிலோ கஞ்சா மாயமாகிவிட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

இதுகுறித்த வழக்கில் மதுரா நீதிமன்றத்தில் மாயமான கஞ்சாவை கிட்டங்கியில் உள்ள எலிகள் தின்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதை ஏற்க மறுக்காத நீதிபதி அதற்கான அத்தாட்சியைக் காட்ட வேண்டும் என்று போலீஸாருக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மதுரா காவல்துறை சிறப்பு போதைப்பொருள் மற்றும் மனஊக்குவிப்பு மருந்து பொருள்கள் சட்டத்தில் (1985) கீழ் பறிமுதல் செய்து போலீஸ் கிட்டங்கிகளில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன என்று போலீஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மதுராவின் ஷெர்கர் பகுதி மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 386 மற்றும் 195 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவை ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா ஷேர்கார் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையங்களின் கிட்டங்கிகளில் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பு வழக்குறைஞர் பதிலளித்தார். ஆனால் எலி தொல்லை அதிகரித்துள்ளதால் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பாத நீதிமன்றம், கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதற்கான ஆதாரத்துடன் நவம்பர் 26ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டிருந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் என்றும், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையையும் அலட்சியப் போக்கையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. போலீஸ் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கஞ்சாவை ஏலம் விடவும் அல்லது அழித்துவிடுவதற்கான ஐந்து அம்ச வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் பிறப்பித்தது.

இது இட்லினா சட்னிகூட நம்பாதுடா சாமிங்குற மாதிரி 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக போலீஸார் விடும் பீளா அமைந்துள்ளது. மதுரா எலிகள் பெரிய போதைக்குருக்களாக இருக்கும்போல!

டாபிக்ஸ்