தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Snake Boat Race: பாம்பு படகு போட்டியில் பங்கேற்ற ராகுல் - வைரல் வீடியோ

snake boat race: பாம்பு படகு போட்டியில் பங்கேற்ற ராகுல் - வைரல் வீடியோ

Karthikeyan S HT Tamil

Sep 19, 2022, 07:02 PM IST

கேரளாவில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்றாா்.
கேரளாவில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்றாா்.

கேரளாவில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்றாா்.

ஆலப்புழா: இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது கேரளாவில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் கலந்து கொண்ட ராகுலின் வீடியோ வைரலாகி வருகின்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Sam Pitroda row: ‘நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்’: பிரதமர் மோடி

Google Wallet for Android users in India: இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலட் இனி கிடைக்கும்!

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' என்னும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறாா். கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய ராகுலின் நடைபயணம் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று ஆலப்புழா புன்னப்புராவில் தங்கி இருந்த ராகுல், இன்று காலை 12ஆவது நாள் பயணத்தை அங்கிருந்து தொடங்கினார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

நடைபயணம் தொடங்கும் முன்பு ராகுல் ஆலப்புழா வடக்கால் கரையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேரளாவில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு உள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து நடைபயணத்தை தொடங்கிய ராகுலுக்கு வழி நெடுக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாம்பு படகு போட்டியில் ராகுல் உற்சாகமாக பங்கேற்றார். ராகுல் படகு பந்தயத்தில் கலந்துகொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, தில்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

டாபிக்ஸ்