தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress President Poll: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு

Congress President Poll: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு

Karthikeyan S HT Tamil

Sep 22, 2022, 01:13 PM IST

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுதில்லி: அடுத்தமாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு வியாழக்கிழமை வெளியிட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதன் பின்னர் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றாா். இந்தசூழலில் கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் அக்கட்சி ஏற்பட்டது. ஏனேனில்

ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் புதிய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சி கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. இதனிடையே சோனியாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அது ஒருமாதம் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்று அதிகாரபூர்வ அறிவிப்பாணையை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை (செப்.24) தொடங்கி இந்தமாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும். 

வேட்புமனு மீதான பரிசீலனை அக்டோபர் 1, வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபார் 8, போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் அக்டோபர் 8 அன்று வெளியிடப்படும். தேர்தல் நடைபெறும் நாள் அக்டோபர் 17 ஆகும். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குகளின் எண்ணிக்கை அக்.19-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர், அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாபிக்ஸ்