தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lok Sabha Election: பாஜகவால் 200ஐ தாண்ட முடியாது! இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்! அடித்து சொல்லும் மம்தா பானர்ஜி!

Lok sabha Election: பாஜகவால் 200ஐ தாண்ட முடியாது! இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்! அடித்து சொல்லும் மம்தா பானர்ஜி!

Kathiravan V HT Tamil

May 26, 2024, 09:10 PM IST

google News
Mamata Banerjee: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று மம்தா பானர்ஜி கூறி உள்ளார் (PTI)
Mamata Banerjee: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று மம்தா பானர்ஜி கூறி உள்ளார்

Mamata Banerjee: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று மம்தா பானர்ஜி கூறி உள்ளார்

இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தலின்படி பாஜகவால் 200 இடங்களை தாண்ட முடியாது என்றும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் துணை புரியும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். 

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியை அகற்ற முயற்சி 

மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயற்சி செய்ய பாஜக துணியக்கூடாது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதன் லட்சியங்கள் சிதைந்துவிடும், ஏனெனில் மக்களின் தீர்ப்பு திரிணாமுல் காங்கிரஸிடம் இருக்கும்" என்று கூறினார். 

"இதுவரை நடந்து முடிந்துள்ள ஆறு கட்ட வாக்குப்பதிவில் எனது பகுப்பாய்வு என்னவென்றால், பாஜக 200 இடங்களை கூட தாண்டாது. அதே நேரத்தில் டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும், திர்ணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். 

பாஜக உடன் ரகசிய தொடர்பு 

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பாஜகவை எதிர்கிறது என்று கூறிய பானர்ஜி கூறினார். காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டுகளும், பாஜகவுடன் ரகசிய தொடர்பு வைத்து உள்ளதாக கூறினார். 

அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நரேந்திர மோடி அரசாங்கத்தை விமர்சித மம்தா பானர்ஜி, பாதுகாப்புத் துறை மற்றும் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பெரிய வணிகங்களின் நலனுக்காக விற்கப்பட்டன, அதே நேரத்தில் எல்பிஜி விலைகள் சிலிண்டர் விலை 1,000 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டன என குற்றம்சாட்டினார். 

பாஜகவின் சர்வாதிகார போக்கு 

அடால்ப் ஹிட்லர் மற்றும் கோயபல்ஸ் போன்றவர்களின் சர்வாதிகாரப் போக்கை பாஜக காட்டுவதாகக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, ஐஐடி பட்டதாரிகளுக்கு கூட வேலை கிடைக்காத ஆட்சியை மோடி கொண்டு வந்ததாக குற்றம் சாட்டினார். 

"26,000 இளம் ஆசிரியர்களின் பணியிடங்களை பறிக்க சதி செய்த போது பாஜகவின் உண்மை நிறம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

பூரி ஜெகநாதர் மோடியின் பக்தர் என்று பாஜக மூத்த தலைவரின் கூற்றை கிண்டல் செய்த பானர்ஜி, ரெமல் புயலை பற்றி குறிப்பிடுகையில், "நாங்கள் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பயப்பட வேண்டாம். உங்கள் வீடுகளில் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளைத் தவிர்த்து கூடுதல் மின் நுகர்வு அலகுகளை அணைத்து வைக்கவும்.” என்று கூறினார். மோடி மீண்டும் பிரதமராக வருவதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் இவ்வளவு நீண்ட கால அட்டவணையை அறிவித்ததாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். 

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், வரும் ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

அடுத்த செய்தி