தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Trinamool Congress: யூசப் பதானை எம்.பி. வேட்பாளராக களமிறக்கிய திரிணாமுல் காங்கிரஸ்

Trinamool Congress: யூசப் பதானை எம்.பி. வேட்பாளராக களமிறக்கிய திரிணாமுல் காங்கிரஸ்

Marimuthu M HT Tamil
Mar 10, 2024 04:23 PM IST

கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த மெகா பேரணியின் போது டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜி அறிவித்த ௪௨ வேட்பாளர்களில் யூசுப் பதான் பெயரிடப்பட்டார்.

Trinamool Congress: யூசப் பதானை எம்.பி. வேட்பாளராக களமிறக்கிய திரிணாமுல் காங்கிரஸ்
Trinamool Congress: யூசப் பதானை எம்.பி. வேட்பாளராக களமிறக்கிய திரிணாமுல் காங்கிரஸ் (X)

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியில் களமிறக்கியுள்ளது. இது 1999ஆம் ஆண்டு முதல் காங்கிரஸின் வங்காளப் பிரிவு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வசம் இருக்கும் தொகுதியாகும். 

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் உத்தரபிரதேச மாநிலம் (80 மக்களவைத் தொகுதிகள்) மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் (48  மக்களவைத் தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிக உயர்ந்த மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக, மேற்கு வங்காளம் 42 தொகுதிகளுடன் திகழ்கிறது.

கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த மெகா பேரணியின்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி அறிவித்த வேட்பாளர்களின் பட்டியலில் யூசுப் பதான் பெயரும் இடம்பெற்றது. 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கடுமையான விமர்சகரான மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக, பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியில் முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யூசப் பதான் களமிறக்கப்படுகிறார். 

யூசப் பதானைத் தவிர, கேள்விக்கு லஞ்சம் கொடுத்த ஊழல் புகாரில் மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மஹுவா மொய்த்ராவும் மேற்கு வங்க மாநிலத்தின், கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2019ஆம் ஆண்டில் வென்ற அதே தொகுதியில் தான், மஹூவா மீண்டும் போட்டியிடுகிறார். 

குறிப்பாக, பசிர்ஹாட் தொகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நுஸ்ரத் ஜஹான் சந்தேஷ்காலி சர்ச்சையின் விளைவாக நீக்கப்பட்டுள்ளார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவருக்கு பதிலாக பசிர்ஹாட்டைச் சேர்ந்த ஹாஜி நூருல் இஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த யூசுப் பதான்? 

  • ஆல்ரவுண்டரான யூசுப் பதான், 2007ஆம் ஆண்டு முதல் ஐசிசி டி 20 போட்டிகள் மற்றும் 2011 ஐசிசி உலகக் கோப்பையின் உலகளாவிய போட்டிகளில் வென்றார். இந்தியா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்தார்.
  • பரோடா ரஞ்சி அணியின் நீண்டகால உறுப்பினரான யூசுப், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதானின் மூத்த சகோதரர் ஆவார்.
  • பாகிஸ்தானுக்கு எதிரான 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இர்பான் பதான் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். 22 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 810 ரன்கள் மற்றும் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • 2021ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • யூசுப் பதான் உள்ளூர் கிரிக்கெட்டில் 100 முதல் தர போட்டிகளிலும், பல லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தனது சகோதரர் யூசுப் பதானின் தேர்தல் அரசியலில் நுழைவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்த பின், எக்ஸ் தளத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவை எழுதினார். 

அதில் "உங்கள் பொறுமை, கருணை, தேவைப்படுபவர்களுக்கு உதவுதல், உத்தியோகபூர்வ பதவி இல்லாமலேயே மக்களுக்கு சேவை செய்தல் ஆகியவற்றைப் பார்த்து இருக்கிறேன். நீங்கள் ஒரு அரசியல் பாத்திரத்தில் அடியெடுத்து வைத்தவுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் எழுதியுள்ளார்.

யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் ஆகிய இருவரும் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். சகோதரர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்ச்சியாகப் போட்டியிடும் தொகுதியில் யூசுப் பதான் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் இருந்து வேட்பாளரை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்