தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Maxim Gorki Russian Maxim Gorki Birthday Today

Maxim Gorki : பட்டாளிகள் இலக்கியத்தின் பிதாமகர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம்

Priyadarshini R HT Tamil

Mar 28, 2023, 06:10 AM IST

கையில் எந்த நேரமும் குறிப்பேடு வைத்துக்கொண்டு தனக்கும் தோன்றுவதை அதில் எழுதி வைத்துக்கொண்டார். 1892ம் ஆண்டு இவரது முதல் சிறுகதையான மகர் சுக்ரா வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து எழுதி வந்தார்.
கையில் எந்த நேரமும் குறிப்பேடு வைத்துக்கொண்டு தனக்கும் தோன்றுவதை அதில் எழுதி வைத்துக்கொண்டார். 1892ம் ஆண்டு இவரது முதல் சிறுகதையான மகர் சுக்ரா வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து எழுதி வந்தார்.

கையில் எந்த நேரமும் குறிப்பேடு வைத்துக்கொண்டு தனக்கும் தோன்றுவதை அதில் எழுதி வைத்துக்கொண்டார். 1892ம் ஆண்டு இவரது முதல் சிறுகதையான மகர் சுக்ரா வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து எழுதி வந்தார்.

கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்று பெயர். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களை கிளர்த்தெழச்செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவையே இவரது எழுத்தின் அடிநாதமாக இருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cat accidentally sets house on fire: பூனையின் அட்டகாசத்தால் பற்றி எரிந்த வீடு.. ரூ.11 லட்சம் பொருட்கள் நாசம்

Russian woman: தனது டிக்கெட்டில் டெல்லி விமான நிலைய அதிகாரி தொலைபேசி எண்ணை எழுதியதாக ரஷ்ய பெண் புகார்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் இதுதான் இவரது உண்மையான பெயர். மாக்சிம் கார்க்கி என்று பரவலாக அறியப்படுபவர், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல் சிந்தனையாளர். அவரது பிறந்த நாள் இன்று. இவர் உலகின் மிகச்சிறந்த புதினங்களில் ஒன்றான தாய் என்ற புதினத்தை எழுதியவர். அந்தப் புதினம் ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களைக்கொண்ட தொழிற்சாலையை கதைக்களமாகவும் கொண்ட புதினம். 

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புதினம் மட்டுமின்றி திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவலாகவும் இருந்தது. இவர் 5 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர் கிட்டத்தட்ட ரஷ்ய முழுவதும் பயணம் செய்துள்ளார். அந்த அனுபங்களே பிற்காலத்தில் அவரது எழுத்தில் பிரதிபலித்தது. அதுவே அவரது எழுத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்கு உதவியது. 

கார்க்கி துவக்க காலத்தில் எழுதிய சிறுகதைகள், நாடகம், கவிதை, நாவல்கள் என அனைத்தும் புகழ்பெற்றவை. மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1868ம் ஆண்டு பிறந்தார். இவரது 5 வயதில் தந்தையை இழந்தார். 11வது வயதில் தாயும் காலமானார். இவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமையால் பள்ளி செல்ல முடியாத இவர், 8 வயது முதல் வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டு தானாவே முயன்று ரஷ்யா, பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளை கற்றார். 

வறுமையும், காலமும் அவரை பல்வேறு பணிகளை செய்ய வைத்தது. காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்ததாக கட்டிட வேலை பின்னர் கப்பலில் வேலை என்று பல வேலைகளை செய்துள்ளார். இதனால் இவர் ரஷ்யா முழுவதும் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்த பயண அனுபவங்களே பிற்காலத்தில் அவர் எழுத்தை செழுமையாக்கின. அவருடன் கப்பலில் பணிபுரிந்த மிகைல் 

அகிமோவிச் என்பவர் இவருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊட்டினார். இவருக்கு கோகோல், ஹென்றி பீல்டிங் ஆகிய நாவலாசிரியர்கள் அறிமுகமானார்கள். பின்னர் டுமாஸ், துர்க்கனேவ், டால்ஸ்டாய், டிக்கன்ஸ, ஆண்டான் செகாவ் ஆகியோரின் படைப்புகளை சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். இலக்கிய வாசிப்பு, படிப்பு, பயிற்சி ஆகியவை அவருடைய அறிவை கூர்மையாக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. பின்னர் அவரும் எழுதத்துவங்கினார்.  

கையில் எந்த நேரமும் குறிப்பேடு வைத்துக்கொண்டு தனக்கும் தோன்றுவதை அதில் எழுதி வைத்துக்கொண்டார். 1892ம் ஆண்டு இவரது முதல் சிறுகதையான மகர் சுக்ரா வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து எழுதி வந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்று பெயர். கொடுங்ககோல் ஆட்சிக்கு எதிராக மக்களை கிளர்த்தெழச்செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவையே இவரது எழுத்தின் அடிநாதமாக இருந்தது. அவரை எந்த அரசுதான் விட்டு வைக்கும். 

புரட்சிகரமான தனது எழுத்துக்களுக்காகவே அடிக்கடி கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கை செய்யப்பட்டன. பல கவிதைகளை எழுதினார். ஏராளமான நூல்களை படித்து அறிவை விரிவாக்கி, சிந்தனையை சீர்திருத்திக்கொண்டே இருந்தார். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர். பட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார்.  

இவரது இலக்கியத்தின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் எழுத்தில் பிரதிபலித்தது. சோஷியலிச எதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும், பல அமர இலக்கியங்களைப்படைத்தவருமான மாக்சிம் கார்க்கி சமூகத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத குழந்தை மனம் கொண்டவராக இருந்தார். அதனால் தற்கொலைக்கு முயன்ற அவர் பிழைத்தார். ஆனால் தனது 68 வயதில் 1936ம் ஆண்டு மறைந்தார். 

டாபிக்ஸ்