தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lok Sabha Polls: 6ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 59% வாக்குகள் பதிவு! அடித்து தூக்கிய மேற்கு வங்கம்!

Lok Sabha polls: 6ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 59% வாக்குகள் பதிவு! அடித்து தூக்கிய மேற்கு வங்கம்!

Kathiravan V HT Tamil

May 25, 2024, 08:49 PM IST

google News
Lok Sabha polls: ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 58.82% வாக்குகள் பதிவாகியுள்ளன. (AFP)
Lok Sabha polls: ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 58.82% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Lok Sabha polls: ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 58.82% வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் கொளுத்தும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிறைந்த லோக்சபா தேர்தலில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்களித்தனர். நாடு முழுவதும் உள்ள ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவில் 58 தொகுதிகளில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

மேற்கு வங்க மாநில வாக்குப்பதிவு நிலவரம்

மேற்கு வங்கத்தில் 78 சதவீததிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. அதே சமயம் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் தலா 52.80% மற்றும் 54.02% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தனது செயலியில் அறிவித்து உள்ளது. 

டெல்லி வாக்குப்பதிவு நிலவரம் 

டெல்லியில் 54.32% வாக்குகளும், ஹரியானாவில் 58.06%, ஒடிசாவில் 59.72%, ஜார்க்கண்டில் 62.13% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

இவை தற்காலிக எண்கள் என்பதால் தேர்தல் ஆணையம் வெளியிடும் இறுதி சதவீகித பட்டியலில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சித் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் புதுதில்லியில் வாக்களித்தனர்.

மேற்கு வங்கத்தில் வன்முறை

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகளில் சில பகுதிகளில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 2019ஆம் ஆண்உ நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எட்டு இடங்களில் பாஜக 5 தொகுதிகளையும், திரிணாமுல் காங்கிரஸ் மூன்று தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. 

ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு நிலவரம் 

ஜார்க்கண்டில் உள்ள கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் 62.16% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜாம்ஷெட்பூரில் அதிகபட்சமாக 66.79% வாக்குகள் பதிவாகி உள்ளன, அதைத் தொடர்ந்து கிரிதிஹ் தொகுதியில் 65.44%, தன்பாத் தொகுதியில் 58.90%, ராஞ்சி தொகுதியில் 58.80% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

பீகார் வாக்குப்பதிவு நிலவரம் 

பீகாரில் 1.49 கோடி வாக்காளர்களில் 52.80% பேர் எட்டு மக்களவைத் தொகுதிகளில் வாக்களித்துள்ளனர். பாஸ்கிம் சம்பரான் தொகுதியில் 56.96% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து வைஷாலி தொகுதியில் 56.11% வாக்குகளும், பூர்வி சம்பாரண் தொகுதியில் 55.80% வாக்குகளும், வால்மீகி நகர் தொகுதியில் 54.81% வாக்குகளும், ஷியோஹர் 54.37% வாக்குகளும், மகாராஜ்கஞ்ச் தொகுதியில் 49.15% வாக்குகளும், கோபால்கஞ்ச் தொகுதியில் 48.71% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

ஒடிசா வாக்குப்பதிவு நிலவரம் 

ஒடிசாவில் 6 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 42 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 59.72% வாக்குகள் பதிவாகி உள்ளன. மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக சம்பல்பூரில் 66.67% வாக்குகள் பதிவாகி உள்ளன, அதே சமயம் பல்லஹாரா சட்டமன்றத் தொகுதியில் 73.86%  வாக்குகள் பதிவாகி உள்ளன. 

ஜம்மு காஷ்மீர் வாக்குப்பதிவு நிலவரம் 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில், மாலை 5 மணிக்குள் 18.36 லட்சம் வாக்காளர்களில் 51% பேர் வாக்களித்து உள்ளனர். இது 28 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு நடைபெற்றதை குறிப்பதாக உள்ளது. 

சூரன்கோட் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 68.56% வாக்குகள் பதிவாகி உள்ளன, ரஜோரியில் 67.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. அனந்த்நாக், அனந்த்நாக் மேற்கு மற்றும் குல்காம் சட்டசபை தொகுதிகளில் 35%க்கும் குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன.

மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

அடுத்த செய்தி