தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வெற்றிக்கு படிக்கட்டாக அமையும் தோல்வி..தோல்வியை கொண்டாட உருவான நாள் சுவாரஸ்ய பின்னணி

வெற்றிக்கு படிக்கட்டாக அமையும் தோல்வி..தோல்வியை கொண்டாட உருவான நாள் சுவாரஸ்ய பின்னணி

Oct 13, 2024, 06:30 AM IST

google News
வெற்றிக்கு படிக்கட்டாக அமையும் தோல்வி. தோல்வி மீதான அச்சத்தை போக்க, தோல்வியை கொண்டாடும் விதமாக சர்வதேச தோல்விக்கான தினம் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.
வெற்றிக்கு படிக்கட்டாக அமையும் தோல்வி. தோல்வி மீதான அச்சத்தை போக்க, தோல்வியை கொண்டாடும் விதமாக சர்வதேச தோல்விக்கான தினம் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.

வெற்றிக்கு படிக்கட்டாக அமையும் தோல்வி. தோல்வி மீதான அச்சத்தை போக்க, தோல்வியை கொண்டாடும் விதமாக சர்வதேச தோல்விக்கான தினம் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.

சர்வதேச தோல்விக்கான தினம், ஃபின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் முன்முயற்சியாக தொடங்கப்பட்டது. இதன் பிறகு அது உலகளாவிய விடுமுறையாக மாறியது. ஆண்டுதோறும் இந்த நாள் அக்டோபர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தோல்விக்கான நாள் வரலாறு

பின்லாந்து நாட்டில் சிறிய வணிகங்கள் அதிகரிக்க வேண்டும் என்று மாணவர்கள் சமூகத்தினர் விரும்பியுள்ளனர். ஆனால் தோல்வியின் மீதான வெறுப்பு, ஸ்டார்-அப்கள் மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

தோல்வியை பற்றிய பயம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் களங்கம் பல தொழில்முனைவோரை ஊக்கம் இழக்க செய்தது. எனவே தோல்வியைக் கொண்டாட ஒரு நாளை உருவாக்கும் யோசனை, ரிஸ்க் எடுப்பதால் ஏற்படும் அபாயத்தை நீக்கவும் இந்த நாள் மாணவர்கள் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது.

அதன்படி 2010இல் பின்லாந்தில் மாணவர்கள் சமூகத்தினரால் முதல் முறையாக இந்த நாள் கொண்டாடப்பட்டது. இரண்டாவது ஆண்டு கொண்டாட்டம் ஊடகத்தில் கவனத்தை பெற்றதோடு, அந்த நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் ஆதரவை பெற்றது. இதன் பின் மூன்றாவது ஆண்டு கொண்டாட்டம் 17 நாடுகளோடு கொண்டாடும் விதமாக விரவாக்கம் பெற்றது.

நோக்கியாவின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஜோர்மா ஒல்லிலா மற்றும் ஆங்ரி பேர்ட் உருவாக்கிய பீட்டர் வெஸ்டர்பேகா ஆகியோரிடமிருந்தும் பெரும் ஆதரவு இந்த நாளுக்கு கிடைத்தது.

தோல்விக்கான சர்வதேச தினம் புதிய மற்றும் தைரியமான விஷயங்களை முயற்சிக்க மக்களை ஊக்குவிக்கிறது; வெற்றிகரமான நபர்களின் கதைகளைப் பகிர்வதன் மூலம் மற்றவர்களை வெற்றிபெற ஊக்குவிக்கிறது.

தோல்விக்கான சர்வதேச தினத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது

நீங்கள் போற்றும் நபர்களின் தனிப்பட்ட பின்னடைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். அவர்களை பற்றிய புத்தகங்கள் அல்லது விடியோக்களை பார்ப்பதன் மூலம் தோல்விகள் மதிப்புமிக்கது, சில சமயங்களில் தேவைப்படக் கூடும் என்பதை புரிந்து கொள்ளலாம்

நீங்கள் பயப்படும் ஏதாவது ஒன்றைச் செய்தல். அதில் தோல்வி அடைந்தால் தைரியமாக தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்.

உங்கள் தோல்விகள் அல்லது மற்றவர்களின் தோல்விகளில் இருந்து நீங்கள் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். ஆச்சரியப்படும் விதமாக, மக்கள் வெற்றி பெறுவதை விட தோல்வியில் தான் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்.

தோல்விக்கான நாள் கொண்டாடுவது எப்படி?

தோல்விக்கான சர்வதேச தினத்தைக் குறிக்க ஒரு நகைச்சுவையான வழி, உங்கள் பணியிடத்திலோ அல்லது நண்பர்களுடனோ தோல்வி விழா நடத்துவது. மிகவும் நகைச்சுவையான அல்லது தோல்விக் கதைகளைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் ஊக்குவிப்பது.

ஒருவருக்கொருவர் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும், சில சமயங்களில் அனைவரும் முன்னேறுவதைப் பார்ப்பதற்கும் இது ஒரு இலகுவான வழியாக அமையக்கூடும்

ஒரு புதிய உலக சாதனையை முயற்சிப்பது. எதுவாக இருந்தாலும், அதன் நோக்கம் வெற்றி பெறுவது அல்ல. மாறாக வேடிக்கையாக முயற்சி செய்வதே. இது முடிவுகள் எப்படியாக இருந்தாலும் பயணத்தை ரசிப்பது பற்றியது தான்

பிரபலமான திரைப்பட பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளை கொண்டாடும் விதமாக, என்ன தவறு நடந்தது மற்றும் வேறு என்ன செய்திருக்கலாம் என்பதை பற்றி தெரிந்தவர்கள், நண்பர்களுடன் விவாதிக்கவும்.

இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தோல்விக்கான சர்வதேச தினத்தின் உணர்வைத் தழுவி, பின்னடைவுகள் மற்றும் சவால்களுக்கு நேர்மறையான அணுகுமுறையை ஊக்குவிக்கலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி