நோக்கியா நியூ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
நோக்கியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் நாளை அறிமுகமாகியுள்ளது.

<p>நோக்கியா ஸ்மார்ட்போன்கள்</p>
நோக்கியா இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை நாளை(ஏப்ரல் 25) அறிமுகம் செய்ய உள்ளது. HMD குளோபலுக்கு சொந்தமான ஸ்மார்ட்போன் பிராண்ட் நோக்கியா G11 மற்றும் நோக்கியா G21 ஐ ஏப்ரல் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ள நிலையில், இப்போது அவை இந்தியாவிலும் வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்போன்களின் டீஸர், அவை பேட்டரியை மையமாகக் கொண்ட போன்கள் என்று கூறுகிறது.
மேலும், யூனிசோக் செயலி, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 6.5 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை நோக்கியா போன்களில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.