தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress: ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பதவி - குலாம் நபி ஆசாத் ராஜிநாமா

Congress: ஜம்மு-காஷ்மீர் பிரசாரக் குழு தலைவர் பதவி - குலாம் நபி ஆசாத் ராஜிநாமா

Karthikeyan S HT Tamil

Aug 17, 2022, 09:05 AM IST

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமனம் செய்த சில மணி நேரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார் குலாம் நபி ஆசாத்.
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமனம் செய்த சில மணி நேரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார் குலாம் நபி ஆசாத்.

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமனம் செய்த சில மணி நேரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார் குலாம் நபி ஆசாத்.

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், அடுத்த சில மணிநேரத்திலேயே அப்பதவியை ராஜிநாமா செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் வகையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியில் புதிதாக பிரசாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, தேர்தல் அறிக்கை குழு என பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இதில் பிரசாரக் குழு தலைவராக குலாம் நபி ஆசாத்தை நியமனம் செய்து கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று அறிவித்தார்.

ஆனால், நியமித்த சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஆசாத். தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜிநாமா செய்துள்ளார். தமது உடல்நிலை காரணமாக பதவியை ஏற்க மறுத்துள்ளதாகவும், பொறுப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் பல்வேறு பொறுப்புகளை விகித்த குலாம் நபி ஆசாத்துக்கு, இந்த நியமனம் அவரது மதிப்பிற்கு குறைவானதாக கருதியதால் ராஜிநாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் விதமாக ஆசாத்துக்கு பொறுப்பு வழங்கி அந்த விகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய சோனியாவுக்கு அவரின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட ஜி-23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்