தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Gate 2023: Last Day To Register For Gate Exam

Gate 2023: பொறியியல் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Karthikeyan S HT Tamil

Sep 30, 2022, 01:08 PM IST

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.
பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.

புதுதில்லி: இந்திய தொழில்நுட்ப கழகத்தால் நடத்தப்படும் கேட் ( Gate) தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cat accidentally sets house on fire: பூனையின் அட்டகாசத்தால் பற்றி எரிந்த வீடு.. ரூ.11 லட்சம் பொருட்கள் நாசம்

Russian woman: தனது டிக்கெட்டில் டெல்லி விமான நிலைய அதிகாரி தொலைபேசி எண்ணை எழுதியதாக ரஷ்ய பெண் புகார்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

இந்திய தொழில்நுட்ப கழகத்தால் பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் (Graduate Aptitude Test in Engineering) எனப்படும் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் என்பது இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிக்க ஒன்றிய அரசால் நடத்தப்படும் தேர்வு ஆகும்.

இந்த தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது.

2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேட் தேர்வுக்கு, தேர்வர்கள் ஆன்லைன் மூலம் gate.iitk.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப். 30) கடைசி நாள் ஆகும். இன்றைய தினம் விண்ணப்பிக்க தவறியவர்கள் தாமதக் கட்டணத்துடன், அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 3ஆம் தேதி முதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

டாபிக்ஸ்