தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Riya Sen: ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற நடிகை ரியா சென் - வீடியோ

Riya sen: ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற நடிகை ரியா சென் - வீடியோ

Karthikeyan S HT Tamil

Nov 17, 2022, 06:22 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை ரியா சென் கலந்துகொண்டார்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை ரியா சென் கலந்துகொண்டார்.

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகை ரியா சென் கலந்துகொண்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு பாரத் ஜோடோ என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுலிடம் தேசியக்கொடியை கொடுத்து பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். 

ட்ரெண்டிங் செய்திகள்

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

தமிழகம் கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது இந்த யாத்திரை மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாஷிம் மாவட்டம் அகோலா பகுதியில் இன்று (நவ.17) நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுலுடன் பிரபல பாலிவுட் நடிகை ரியா சென் கலந்துகொண்டார். ரியா சென் தமிழில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த குட்லக் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 

பின்னர் ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தில் பாலிவுட் நடிகை பூஜா பட்டும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்