தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bharat Jodo Yatra: Video Of Rahul Gandhi Helping Girl Wear Sandal Goes Viral

Bharat Jodo Yatra: நடைபயணத்தின் போது சிறுமியின் காலில் காலணி மாட்டிவிட்ட ராகுல்!

Karthikeyan S HT Tamil

Sep 18, 2022, 07:45 PM IST

கேரளாவில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் போது வழியில் சிறுமி ஒருவரின் காலில் ராகுல், காலணி மாட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளாவில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் போது வழியில் சிறுமி ஒருவரின் காலில் ராகுல், காலணி மாட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் போது வழியில் சிறுமி ஒருவரின் காலில் ராகுல், காலணி மாட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' என்னும் நடைபயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வழியில் சிறுமி ஒருவரின் காலில் ராகுல், காலணி மாட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cat accidentally sets house on fire: பூனையின் அட்டகாசத்தால் பற்றி எரிந்த வீடு.. ரூ.11 லட்சம் பொருட்கள் நாசம்

Russian woman: தனது டிக்கெட்டில் டெல்லி விமான நிலைய அதிகாரி தொலைபேசி எண்ணை எழுதியதாக ரஷ்ய பெண் புகார்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

காங்கிரஸ் சார்பில் 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் செப்டம்பர் 7ல் கன்னியாகுமரியில் தொடங்கியது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ தூரம் மொத்தம் 150 நாட்களுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணத்தை நிறைவு செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 11-ம் தேதி முதல் கேரளாவில் நடைபயணத்தை தொடர்ந்தார். செப்டம்பர்14ம் தேதி வரை (8 நாட்களில்) 150 கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் செப்.15ந் தேதி ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இருந்து நடைபயணத்தை துவங்கிய ராகுல், இன்று ஆலப்புழா ஹரிபாட் பகுதியில் இருந்து ஒட்டப்பன பகுதியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.

நடைபயணத்தின் போது வழியில் சிறுமி ஒருவரும் ராகுலுடன் நடந்து சென்றார். அப்போது, சிறுமியின் காலணி அவரின் காலை விட்டு கழன்றுள்ளது. இதைப் பார்த்த ராகுல், ஹலோ பிரதர் ஒரு நிமிஷம் நில்லுங்கனு சொல்லிக்கொண்டு குழந்தையின் காலில் இருந்து கழன்ட காலணியை அவரே மாட்டி விட்டார்.

மேலும், குழந்தைகள் சிலரும் ராகுலுக்கு பூக்களை கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.

டாபிக்ஸ்