தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Suresh Gopi On Minister Post: ’மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ நடிகர் சுரேஷ் கோபி புதிய விளக்கம்!

Suresh Gopi on Minister Post: ’மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ நடிகர் சுரேஷ் கோபி புதிய விளக்கம்!

Kathiravan V HT Tamil

Jun 10, 2024, 03:42 PM IST

google News
Suresh Gopi: திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருமான வி.எஸ்.சுனில் குமாரை 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். (PTI)
Suresh Gopi: திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருமான வி.எஸ்.சுனில் குமாரை 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Suresh Gopi: திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருமான வி.எஸ்.சுனில் குமாரை 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான செய்திகளுக்கு நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் பாஜகவின் கணக்கை தொடங்கிய சுரேஷ் கோபி 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் உள்ள திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, வழக்கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருமான வி.எஸ்.சுனில் குமாரை  74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரள மாநில அரசியல் வரலாற்றில் பாஜக தனது எம்.பி கணக்கை தொடங்கி உள்ளது. 

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர் பதவிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

கேபினட் அமைச்சர்கள் 

கேபினட் அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் ஜெய்ராம் கட்கரி, ஜகத் பிரகாஷ் நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியம் ஜெய்சங்கர், மனோகர் லால், எச்டி குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லலன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, பிரலாத் ஜோஷி, ஜுவல் ஓரம், கிரிராஜ் சிங், அஷ்வினி வைஷ்னா, ஜோதிராதித்யா எம். சிந்தியா, பூபேந்தர் யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரேன் ரிஜுனா தேவி, கிரன் ரிஜுனா தேவி , ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, ஜி கிஷன் ரெட்டி, சிராக் பாஸ்வான் மற்றும் சிஆர் பாட்டீல் ஆகியோர்கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர் பொறுப்பு 

தனிப்பொறுப்பு உடன் கூடிய இணை அமைச்சர்களாக ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால், ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவ் மற்றும் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரும், இணை அமைச்சர்களாக ஜிதின் பிரசாத், ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், பங்கஜ் சவுத்ரி, கிரிஷன் பால் ராம்தாஸ் அத்வாலே, ராம் நாத் தாக்கூர் நித்யானந்த் ராய் அனுப்ரியா படேல் வி. சோமன்னா, சந்திர சேகர் பெம்மாசானி, எஸ்பி சிங் பாகேல், சுஸ்ரீ சோபா கரந்த்லாஜே, ஷானு வர்மா சிங், கீர்த்திவர்தன். தாக்கூர், சுரேஷ் கோபி, எல்.முருகன், அஜய் தம்தா, பாண்டி சஞ்சய் குமார், கமலேஷ் பாஸ்வான், பகீரத் சவுத்ரி, சதீஷ் சந்திர துபே, சஞ்சய் சேத், ரவ்னீத் சிங், துர்கதாஸ் உய்கே, ரக்ஷா நிகில் காட்சே, சுகந்தா மஜூம்தார், சாவித்ரி சோத்ஹூத், ராஜ் பூஷன் சௌத் , பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா, முரளிதர் மொஹோல், ஜார்ஜ் குரியன் மற்றும் பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்ட நடிகர் சுரேஷ் கோபி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், இது தொடர்பான செய்திகளுக்கு சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், ”மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் நரேந்திர மோடி அவகளின் தலைமையில் கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு உறுதிப்பூண்டு உள்ளேன்” என தெரிவித்து உள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை