தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Modi 3.0 Cabinet: ’பாஜக தலைவர் பதவிக்கு டாட்டா! மத்திய அமைச்சர் ஆகும் ஜே.பி.நட்டா!’ தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு!

Modi 3.0 Cabinet: ’பாஜக தலைவர் பதவிக்கு டாட்டா! மத்திய அமைச்சர் ஆகும் ஜே.பி.நட்டா!’ தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு!

Kathiravan V HT Tamil
Jun 09, 2024 05:13 PM IST

Modi 3.0 Cabinet: ’இந்த மாதத்துடன் பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், மோடி.30 அமைச்சரவையில் ஜே.பி.நட்டா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது’

Modi 3.0 Cabinet: ’பாஜக தலைவர் பதவிக்கு டாட்டா! அமைச்சர் ஆகும் ஜே.பி.நட்டா!’ தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு!
Modi 3.0 Cabinet: ’பாஜக தலைவர் பதவிக்கு டாட்டா! அமைச்சர் ஆகும் ஜே.பி.நட்டா!’ தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு! (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த மெகா நிகழ்வு தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் ஃபோர்கோர்ட்டில் இரவு 7:15 மணிக்கு தொடங்க உள்ளது.

பதவியேற்பு விழாவில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்கள் உட்பட 8,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முழு அமைச்சரவையின் பலம் 81 வரை இருக்க வாய்ப்பு

30 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்றும், முழு அமைச்சரவையின் பலம் 78 முதல் 81 வரை இருக்கலாம் என்றும் என்.டி.டிவி தெரிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஆன அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு முக்கிய இலாக்காகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மோடியின் அமைச்சரவையில் யார்?

மேலும் பாஜக தலைவர்கள் சர்பானந்தா சோனோவால், மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், பண்டி சஞ்சய் குமார், ரவ்னீத் சிங் பிட்டு, சி.ஆர்.பாட்டீல், ஜோதிராதித்ய சிந்தியா, ராவ் இந்தர்ஜித் சிங், நித்யானந்த் ராய், பகீரத் சவுத்ரி மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாக்கூர், கிரிராஜ் சிங் மற்றும் நித்யானந்த் ராய், எச்ஏஎம் தலைவர் ஜிதன் ராம் மஞ்சி, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான், ஜிதின் பிரசாதா, லட்சுமி காந்த் பாஜ்பாய் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளனர். 

அனுராக் தாகூர் வெளியே! ஜே.பி.நட்டா உள்ளே!

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 5 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி உள்ள நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த அனுராக் தாகூருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. அவருக்கு அதே மாநிலத்தை சேர்ந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இரவு விருந்து அளிக்கும் ஜே.பி.நட்டா 

இந்த மாதத்துடன் பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நிறைவு பெறும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்களுக்கு தனது இல்லத்தில் இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். 

அவரது இல்லத்தில் இரவு உணவு நிகழ்ச்சிக்கான மெனுவில், கோடைக் காலத்தில் பிரத்யேகமாக ருசிக்கப்படும் உணவு வகைகளான லிச்சி, 'மட்கா குல்பி,' மாம்பழ சுவைகளை கொண்ட ஜூஸ்கள்  , ஜோத்பூரி சப்ஜி,' பருப்பு, டம் பிரியாணி மற்றும் ஐந்து வகையான ரொட்டிகள், பஞ்சாபி உணவுகள், பஜ்ரா கிச்சடி’ எட்டு வகையான இனிப்பு வகைகளுடன் கூடிய உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. 

டி20 உலகக் கோப்பை 2024