Suresh Gopi BJP: வெற்றித்திலகம் வைத்த மோடி.. மானம் காத்த கேரள தாமரை.. - யார் இந்த சுரேஷ் கோபி?
Suresh Gopi BJP: பல திரைப்படங்களில் சுரேஷ் கோபி நடித்த போதும், 1992ம் ஆண்டு வெளியான ‘ஷாஜி கைலாஸ் தலஸ்தானம்’ திரைப்படம் சுரேஷ் கோபிக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது - யார் இந்த சுரேஷ் கோபி
(1 / 6)
2024 மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி அபார வெற்றிபெற்று, அங்கு பாஜகவின் வெற்றிக்கணக்கை தொடங்கி வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை பற்றி இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். அவர் ஒரு மலையாள நடிகர்கேரள மாநிலம், ஆலப்புழாவில் 1958ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் சுரேஷ் கோபி. விலங்கியலில், இளங்கலை அறிவியல் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்ற இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்திருக்கிறார். தொண்டுகள் பலவற்றை செய்து வரும் இவர் சமூக சேவகராகவும் அறியப்படுகிறார்.
(2 / 6)
பல திரைப்படங்களில் சுரேஷ் கோபி நடித்த போதும், 1992ம் ஆண்டு வெளியான ‘ஷாஜி கைலாஸ் தலஸ்தானம்’ திரைப்படம் சுரேஷ் கோபிக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. 1993ம் ஆண்டு வெளியான ‘ஏகலவ்யன்’ திரைப்படம், அவரை மலையாள சினிமாவில் ஒரு ஸ்டார் நடிகராக மாற்றியது. இவை தவிர அவர் நடிப்பில் வெளியான ‘மணிச்சித்ரதாழ்’, ‘கமிஷனர்’ உள்ளிட்ட பல படங்கள் மக்களிடம் வர வேற்பை பெற்றன. 1997ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான லேலம் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர் அவரின் கேரியர் பெஸ்ட் கேரக்டராக பார்க்கப்படுகிறது.
(3 / 6)
விருதுகள்1998 ஆம் ஆண்டில், காளியாட்டம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் சுரேஷ் வென்றார். கடந்த 2015 ம் ஆண்டு வெளியான மை காட் படத்தில் நடித்த கோபி அதன் பின்னர் நடிப்புக்கு 5 வருடங்கள் பிரேக் விட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘வரனே அவஷ்யமுண்ட்’ படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்து, மீண்டும் ரீ என் ட்ரி கொடுத்தார்.
(4 / 6)
தொலைக்காட்சி தொடர்களில் பங்கு கடந்த 2012ம் ஆண்டு ‘நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியின் மலையாள வெர்ஷனை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய சுரேஷ் கோபி, இன்னொரு கேம் ஷோவான ‘அஞ்சினோடு இஞ்சோடிஞ்சு’; நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
(5 / 6)
அரசியல் வாழ்க்கைகடந்த 2016ம் ஆண்டு சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். அந்த ஆண்டே பிரிவு 80 -ன் படி, இந்திய குடியரசு தலைவரால் எம்.பி ஆக்கப்பட்டார். 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை அவர் எம்.பி ஆக பதவி வகித்தார்
(6 / 6)
2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் அவர் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டி.என்.பிரதாபனிடம் தோல்வியடைந்தார். இதனையடுத்து 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் பாஜக சார்பாக திருச்சூர் தொகுதியில் களமிறங்கினார். தற்போது வெற்றி பெற்று இருக்கிறார்
மற்ற கேலரிக்கள்